இனி பணியிடங்களில் கொரோனா தடுப்பூசிகள்..தொற்றை கட்டுப்படுத்த எடுத்த முடிவு!!!

0

அதிகரித்து வரும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த ஜப்பானில் வரும் 21 ஆம் தேதி முதல் பணியிடங்கள் மற்றும் பல்கலை கழகங்களில் கொரோனா தடுப்பூசிகள் போட முடிவு செய்யப்பட்டு உள்ளது.

ENEWZ  WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

ஜப்பானில் தடுப்பூசி திட்டம் பிப்ரவரி மாதம் தொடங்கப்பட்டது. ஆரம்பத்தில் சுகாதாரப் பணியாளர்களுக்காகவும் பின்னர் ஏப்ரல் மாதத்தில் முதியோருக்கு விரிவுபடுத்தப்பட்டதாலும், நாட்டின் 126 மில்லியன் மக்களில் சுமார் 7 சதவீதம் பேர் மட்டுமே தடுப்பூசியின் முதல் டோஸைப் பெற்றுள்ளனர். இப்போது 65 வயதிற்கு வயதிற்குள்ளானவர்களுக்கு தடுப்பூசி போட திட்டமிட்டுள்ளது.

இதுவரை ஜப்பானில் 7.45 லட்சம் பேர் கொரோனா பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர். அவர்களில் 6.72 லட்சம் பேர் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர். மொத்தம் 12,926 பேர் உயிரிழந்து உள்ளனர். எனவே கொரோனா பாதிப்புகளை கட்டுப்படுத்த தடுப்பூசி போடும் பணிகளை அந்நாடு தீவிரப்படுத்தி உள்ளது.  ஜப்பானில் 12 முதல் 15 வயதுக்கு உட்பட்டோருக்கு பைசர் தடுப்பூசி போடவும் அரசு ஒப்புதல் அளித்து உள்ளது.

தற்போது தடுப்பூசி செல்லுவதை வேகப்படுத்த பணியிடங்கள் மற்றும் பல்கலை கழகங்களில் கொரோனா தடுப்பூசிகள் போட அந்நாட்டு அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக பணியிடங்கள் மற்றும் பல்கலை கழகங்களில், மாடர்னா கொரோனா தடுப்பூசிகள் பயன்படுத்தப்படும் என கூறியுள்ளார்.இது வருகிற 21 ஆம் தேதி முதல் செயல்படுத்தப்பட ஜப்பான் அரசு தெரிவித்துள்ளது.

Facebook   => Like செய்ய கிளிக் பண்ணுங்க!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here