மில்லியன் கணக்கில் கொரோனா தடுப்பூசிகளை பிற நாடுகளுக்கு வழங்கவுள்ள ஜப்பான்.. வெளியுறவுத்துறை அமைச்சர் தகவல்!!!

0

ஜப்பான் இந்த வாரத்தில் தனது அண்டை நாடுகளுக்கு மில்லியன் கணக்கில் கொரோனா தடுப்பூசிகளை வழங்க உள்ளதாக அந்நாட்டின் வெளியுறவு மந்திரி தோஷிமிட்சு மொடேகி தெரிவித்துள்ளார்.

உணவு தட்டுப்பாடு இருந்த காலம் மலையேறி தற்போது உலக நாடுகள் பலவற்றில் கொரோனா தடுப்பூசிக்கே தட்டுப்பாடு நிலவுகிறது. அந்த அளவுக்கு கொரோனா தொற்று நோய் கிருமி மனிதர்களை பாடாய் படுத்தி வருகிறது. இந்தியா உட்பட பல்வேறு நாடுகள் தடுப்பூசியை கொள்முதல் செய்வதோடு இறக்குமதியும் செய்துவருகின்றன.

இந்நிலையில் தனது அண்டை நாடுகளுக்கு உதவும் வகையில் ஜப்பான் அரசு அஸ்ட்ராஜெனெகா கொரோனா தடுப்பூசியை மில்லியன் கணக்கில் தைவான், தாய்லாந்து, பிலிப்பைன்ஸ் மற்றும் வியட்நாம் போன்ற நாடுகளுக்கு இந்த வார இறுதிக்குள் வழங்க இருக்கிறது. இந்த தகவலை ஜப்பானின் வெளியுறவு மந்திரி தோஷிமிட்சு மொடேகி வெளியிட்டார்.

அதன்படி ஜப்பான் அரசு 1.1 மில்லியன் தடுப்பூசிகளை தைவான் நாட்டிற்கும், மேலும் ஒரு மில்லியன் தடுப்பூசிகளை தாய்லாந்து, பிலிபைன்ஸ் மற்றும் வியட்னாமிற்கும் இந்த வார இறுதியில் வழங்க இருக்கிறது. சென்ற மாதம் 1.24 மில்லியன் தடுப்பூசிகளை தைவான் நாட்டிற்கு ஜப்பான் அளித்தது குறிப்பிடத்தக்கது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here