கோலிவுட் திரையில் தளபதி என்ற புகழுடன் ஜொலித்து கொண்டிருப்பவர் தான் நடிகர் விஜய். இவர் நடிப்பில் அண்மையில் வெளியான ”லியோ” திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வசூலில் கல்லா கட்டி இருந்தது. இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தவர் தான் பிக் பாஸ் பிரபலம் ஜனனி. தனியார் சேனல் ஒன்றுக்கு பேட்டி கொடுத்த இவர் விஜய் பற்றி பேசியது இணையத்தில் வைரலாகி வருகிறது

அதாவது லியோ பட ஷூட்டிங்கின் போது ஜனனி பேசுவதை கேட்ட விஜய், தன்னுடைய மனைவி சங்கீதாவின் சகோதரி உங்களை போல தான் பேசுவார் என கூறியுள்ளார். மேலும் சங்கீதாவும் உங்களை போல் அமைதியாக பேசுவார் என தனது மனைவியை பற்றி பெருமையாக பேசியுள்ளார். இதை வைத்து பார்க்கும்போது விஜய் – சங்கீதா விவாகரத்து பற்றிய செய்தி வெறும் வதந்திதான், அவர்கள் இப்போது வரை சேர்ந்து தான் இருக்கிறார் ஜனனி கூறியதில் இருந்து தெரிய வந்துள்ளது.