ஜம்மு காஷ்மீரில் சி.ஆர்.பி.எஃப் வீரர்,சிறுவனைக் கொன்ற பயங்கரவாதி சுட்டுக் கொலை..!

0

ஜம்மு-காஷ்மீரில் ஸ்ரீநகரின் புறநகரில் உள்ள மால்பாக் பகுதியில் கடந்த இரவு முழுவதும் நடந்த ஒரு மோதலின் போது மத்திய ரிசர்வ் போலீஸ் படையால் (சிஆர்பிஎஃப்) ஒரு பயங்கரவாதி நேற்று இரவு கொல்லப்பட்டான். புல்லட் காயம் அடைந்த அதிகாரி ஒருவர் படுகாயமடைந்தார். கடந்த 45 நாட்களில் ஸ்ரீநகரில் நடந்த மூன்றாவது எண்கவுன்டர் இதுவாகும்.

பயங்கரவாதி சுட்டுக்கொலை:

படுகொலை செய்யப்பட்ட பயங்கரவாதியை அனந்த்நாக் வாகாமாவில் வசிக்கும் ஜாஹித் அஹ்மத் தாஸ் என படைகள் அடையாளம் காட்டின. இந்த ஆண்டு ஜூன் 26 ஆம் தேதி அனந்த்நாக், பிஜ்பெஹாரா என்ற இடத்தில் சிஆர்பிஎஃப் மற்றும் ஜம்மு-காஷ்மீர் காவல்துறை மீதான தாக்குதலில் அவர் ஈடுபட்டார். இந்த தாக்குதலில் ஒரு சிஆர்பிஎஃப் பணியாளர் மற்றும் ஆறு வயது குழந்தை கொல்லப்பட்டனர்.

ஜூன் 30 அன்று, ஜாஹித் தாஸும் மற்ற இரண்டு பயங்கரவாதிகளும் அனந்த்நாகில் சிக்கினர். ஆனால் அவர்கள் அந்த இடத்திலிருந்து தப்பினர். மற்ற இரண்டு பயங்கரவாதிகளும் CRPF படைகளால் கொல்லப்பட்டனர். ஸ்ரீநகரின் மால்பாக் பகுதியில் நேற்று இரவு சிறப்பு நடவடிக்கைக் குழு மற்றும் சிஆர்பிஎஃப் கூட்டு பாதுகாப்பு நடவடிக்கையைத் தொடங்கியதாக போலீசார் தெரிவித்தனர். ஒரு சிஆர்பிஎஃப் வீரர் என்கவுண்டரின் போது கொல்லப்பட்டார்.

டெலிகிராம் இல் தகவல்களைப் பெற இங்கே கிளிக் செய்யவும்

ஜம்மு-காஷ்மீர் காவல்துறையினர் நேற்று பயங்கரவாதிகள் மற்றும் பாதுகாப்பு படையினருக்கு இடையே மோதல் நடந்ததை உறுதிசெய்து, “ஸ்ரீநகரின் மால்பாக் பகுதியில் என்கவுண்டர் தொடங்கப்பட்டுள்ளது. போலீசாரும் பாதுகாப்பு படையினரும் பணியில் உள்ளனர். மேலும் விவரங்கள் தெரிவிக்கபடும்” என்று ட்வீட் செய்துள்ளார்.

கூட்டுக் குழு சந்தேகத்திற்கிடமான இடத்தை சுற்றி வளைத்தபோது, ​​மறைந்த பயங்கரவாதிகள் அவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதாக ஒரு போலீஸ் அதிகாரி கூறினார். என்கவுன்டர் நடந்தபோது 1-2 பயங்கரவாதிகள் அப்பகுதியில் பதுங்கி இருந்ததாக வட்டாரங்கள் தெரிவித்தன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here