ஜேம்ஸ் பாண்ட் நடிகருக்கு அடித்த ஜாக்பாட் – கடற்படை கெளரவ தளபதியாக நியமித்து அரசு அதிரடி!!

0

உலக அளவில் புகழ்பெற்ற ஆக்சன் திரைப்படமான ஜேம்ஸ் பாண்ட் படத்தில் நடித்த நடிகர் டேனியல் கிரேக்கை கெளரவ தளபதியாக நியமித்து பிரிட்டன் கடற்படை உத்தரவிட்டுள்ளது.

நடிகருக்கு அங்கீகாரம்:

உலகம் முழுவதும் சிறந்த ஆக்சன் படமாகவும்,  துப்பறியும் கதாபாத்திரத்தை தத்ரூபமாக வெளிக்காட்டுவதில் மிக சிறந்த இடத்தை மக்கள் மனதில் பெற்றிருக்கும் திரைப்படம் ஜேம்ஸ் பாண்ட் என்பது அனைவரும் ஏற்றுக்கொள்ள கூடிய உண்மை. இந்த நிலையில், இந்த திரைப்படத்தில் சிறந்த துப்பறியும் அதிகாரியாக கலக்கிய நடிகர் டேனியல் கிரேக் அவர்களின் பெருமையை அங்கீகாரம் செய்யும் விதமாக முக்கிய பொறுப்பை பிரிட்டன் அரசு அவருக்கு அளித்துள்ளது.

அதாவது, பிரிட்டன் கடற்படையில் கவுரவ தளபதியாக டேனியல் கிரேக்கை  நியமித்து பிரிட்டன் ராயல் கடற்படை தளபதி உத்தரவிட்டுள்ளார்.  கடந்த 2006ம் ஆண்டு முதல் நடித்து வரும் இவரின் கடைசி படம் வருகிற செப் 30ம் தேதி திரைக்கு வர உள்ளது குறிப்பிடத் தகுந்தது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here