மீண்டும் கைதான மீரா மிதுன்?? – இனி ஜாமின்ல கூட வெளியே வர முடியாதாம்!

0
மீண்டும் கைதான மீரா மிதுன்?? - இனி ஜாமின்ல கூட வெளியே வர முடியாதாம்!
மீண்டும் கைதான மீரா மிதுன்?? - இனி ஜாமின்ல கூட வெளியே வர முடியாதாம்!

பட்டியல் இன மக்கள் குறித்து அவதூறாக பேசிய வழக்கில், பிரபல நடிகை மீரா மிதுனை மீண்டும் கைது செய்து, வருகிற ஏப்ரல் 4ம் தேதிக்குள் மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது.

பிடிவாரண்ட் உத்தரவு:

பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர் நடிகை மீரா மிதுன். இவர் கடந்த சில மாதங்களுக்கு முன் பட்டியலின மக்கள் குறித்து அவதூறாக பேசி வீடியோ வெளியிட்டார். இதையடுத்து, எழுத புகாரின் பேரில் மீரா மிதுன் மற்றும் அவரது நண்பர் சாம் அபிஷேக் ஆகிய இருவரும் கைது புழல் சிறையில் அடைக்கப்பட்டனர். அதன் பின் இருவரும் ஜாமீனில் வெளிவந்தனர். இந்த வழக்கில் இருவர் மீதான குற்றப்பத்திரிகையும் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்த வழக்கின் விசாரணை மீண்டும் முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி எஸ்.அல்லி முன்பு விசாரணைக்கு வந்தது. ஆனால், இந்த வழக்கில் மீரா மிதுன் ஆஜராகவில்லை. இதனால், அவரை வருகிற ஏப்ரல் 4ம் தேதிக்குள் மீண்டும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது. இவர் மீது, ஜாமீனில் வெளியே வர முடியாத படி பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் இவர் மீண்டும் கைது செய்யப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here