தமிழகத்தில் நடக்க இருக்கும் ஜல்லிக்கட்டு.., இதை கண்டிப்பா பலோவ் பண்ணனும்.., அரசு உத்தரவு!!

0
தமிழகத்தில் நடக்க இருக்கும் ஜல்லிக்கட்டு.., இதை கண்டிப்பா பலோவ் பண்ணனும்.., அரசு உத்தரவு!!
தமிழகத்தில் நடக்க இருக்கும் ஜல்லிக்கட்டு.., இதை கண்டிப்பா பலோவ் பண்ணனும்.., அரசு உத்தரவு!!

தமிழகத்தில் பொங்கல் திருநாளையொட்டி தொடர்ந்து மூன்று நாட்கள் மதுரை மாவட்டம் அலங்காநல்லூர், பாலமேடு, அவனியாபுரம் போன்ற இடங்களில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறும். இந்த போட்டியில் பங்கேற்பதற்காக தமிழ்நாட்டின் பல கிராமங்களில் இருந்து இளைஞர்கள் கலந்து கொள்வார்கள். மேலும் ஜல்லிக்கட்டை பார்க்க தமிழகத்தின் பல பகுதியில் இருந்து மக்கள் வருவார்கள்.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இந்நிலையில் போட்டி குறித்த அறிவிப்பை தற்போது மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. ஜல்லிக்கட்டில் கலந்து கொள்ளும் மாடுபிடி வீரர்கள் தங்களது பெயரை இன்று முதல் ஆன்லைன் மூலம் பதியலாம் என கூறியுள்ளனர். மேலும் இன்று முதல் 3 நாட்களுக்கு பதியலாம் என தெரிவித்துள்ளனர். முன்பதிவு செய்யும் மாடுபிடி வீரர்கள் வயது சான்று, போட்டோ, கொரோனா தடுப்பூசி சான்றிதழையும் பதிய வேண்டும்.

மதுரை வாசிகளே கவனம்.,ஜன.11ல் (நாளை) இவ்ளோ பகுதிகளில் Power Cut., முழு விவரங்கள் உள்ளே!!

மேலும் ஜல்லிக்கட்டில் பங்கேற்கும் மாடுகளையும் முன்பதிவு செய்ய வேண்டும் என்றும், மாட்டுடன் இருவர் அனுமதிக்கப்படுவார்கள் என கூறியுள்ளனர். அவர்கள் கொரோனா தடுப்பூசி சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும் என பல்வேறு கட்டுப்பாடுகளை மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here