ஜல்லிக்கட்டுக்கு தடை? உச்சநீதிமன்றத்தில் வழக்கு போட்ட பீட்டா! ஸ்டாலின் அவசர ஆலோசனை!!

0
ஜல்லிக்கட்டுக்கு தடை? உச்சநீதிமன்றத்தில் வழக்கு போட்ட பீட்டா! ஸ்டாலின் அவசர ஆலோசனை!!
ஜல்லிக்கட்டுக்கு தடை? உச்சநீதிமன்றத்தில் வழக்கு போட்ட பீட்டா! ஸ்டாலின் அவசர ஆலோசனை!!

ஜல்லிக்கட்டுக்கு மீண்டும் தடை விதிக்க கோரி பீட்டா உள்ளிட்ட 15 அமைப்புகள், உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ள நிலையில், இது குறித்து முதல்வர் ஸ்டாலின் இன்று ஆலோசனை நடத்துகிறார்.

அவசர ஆலோசனை:

கடந்த 2016ம் ஆண்டு தமிழகத்தின் பாரம்பரிய விளையாட்டான, ஜல்லிக்கட்டு போட்டிக்கு தடை விதிக்கப்பட்டது. பீட்டா உள்ளிட்ட விலங்கு நல வாரிய அமைப்பு, காளைகளை துன்புறுத்துவதாக சொல்லி இந்த போட்டிக்கு தடை விதித்தது. இதனை எதிர்த்து மாணவர் மற்றும் பொதுமக்கள் பலரும் அமைதிப் போராட்டம் நடத்தியது அரசியல் வரலாற்றில் திருப்புமுனையை ஏற்படுத்தியது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

இந்த, போராட்டத்தை தொடர்ந்து அப்போதைய அதிமுக அரசு அதற்கான அவசர சட்டத்தை பிறப்பித்து, இதற்கான அனுமதியை பெற்று தந்தது. இதனைத் தொடர்ந்து கடந்த 4 ஆண்டுகளாக உலகப் புகழ்பெற்ற ஜல்லிக்கட்டு போட்டிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், ஜல்லிக்கட்டு போட்டிக்கு மீண்டும் தடை விதிக்க வேண்டும் என பீட்டா உள்ளிட்ட 15 க்கு மேற்பட்ட அமைப்புகள் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது.

பெட்ரோல், டீசல் இன்றைய விலை நிலவரம்(15.11.2022)-முழு விவரம் உள்ளே!

தற்போது இந்த வழக்கு குறித்து, தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் இன்று அதிகாரிகளுடன் அவசர ஆலோசனை நடத்துகிறார். வழக்கின் தன்மை, அரசின் அடுத்த கட்ட நகர்வு என அனைத்து தரப்பு கருத்துகளையும் இந்தக் கூட்டத்தில் முதல்வர் அலசி ஆராய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here