
நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த மாதம் 10ம் தேதி வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற திரைப்படம் தான் ஜெயிலர். இப்படம் 600 கோடிக்கு மேல் பாக்ஸ் ஆபிஸில் கலெக்சன் அள்ளி உள்ள நிலையில் தற்போது புதிதாக ஒரு சாதனையை படைத்துள்ளது. அதாவது மலேசியாவில் இந்த படத்தை ஐங்கரன் நிறுவனம் ரிலீஸ் செய்த நிலையில் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது.
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
அதில் ஜெயிலர் திரைப்படம் இதற்கு முன்னர் வெளியான இந்திய படங்களை பின்னுக்கு தள்ளி வசூலில் முதல் இடத்தை பிடித்து உள்ளது. இதற்கு முன்னர் மலேசியாவில் ஷாருக்கானின் தில்வாலே படம் 5.5 மில்லியன் மலேசிய ரிங்கிட் வசூலித்து முதலிடத்தில் இருந்தது. அதை ஜெயிலர் படம் முறியடித்து இருக்கிறது. இதை ரஜினி ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.