அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மீதான நடவடிக்கைகளை ரத்து செய்ய வேண்டும் – முதல்வருக்கு ஜாக்டோ – ஜியோ மனு!!

0

கடந்த 2019ம் ஆண்டு நடைபெற்ற ஜாக்டோ – ஜியோ போராட்டத்தில் பங்கேற்ற அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மீதான நடவடிக்கைகளை கைவிடவேண்டும் என்று தமிழக முதல்வருக்கு மனு.

தமிழக முதல்வருக்கு மனு..!

ஜாக்டோ – ஜியோ பேரமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் கூட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானத்தின்படி கோரிக்கையை வலியுறுத்தி மாநிலம் தழுவிய அளவில் தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களில் இருந்து மாவட்ட ஆட்சியர், முதன்மை கல்வி அலுவலர், மண்டல கல்லூரி கல்வி இணை இயக்குனர் ஆகியோர் மூலமாக தமிழக முதல்வருக்கு முறையீட்டு மனு வியாழக்கிழமை அனுப்பப்பட்டது.

ENEWZ – சமூக வலைதள பக்கங்களில் சேர கிளிக் பண்ணுங்க!!

அதன்படி வேலூர் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் க. சரவணராஜ் தலைமையில் ஜாக்டோ – ஜியோ அமைப்பினர் மாவட்ட வருவாய் அலுவலர் ஜெ. பார்த்திபன், முதன்மை கல்வி அலுவலர் சா.மார்ஸ், மண்டல கல்லூரி கல்வி இணை இயக்குனர் ஜி. எழிலன் ஆகியோரிடம் அளிக்கப்பட்ட மனுவில் கூறிருப்பது.

ஜாக்டோ – ஜியோ அமைப்பு கோரிக்கை..!

அரசு ஊழியர்கள், ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பான, ஜாக்டோ – ஜியோ சார்பில், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, ஒன்றரை ஆண்டுகளுக்கு முன் போராட்டம் நடந்தது. இதில் பங்கேற்ற ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் மீது, நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு உள்ளன.அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் என, 5,068 பேருக்கு, குற்ற குறிப்பாணை வழங்கப்பட்டது. இதன் மீதான நடவடிக்கைகள் நிலுவையில் உள்ளதால், பதவி உயர்வு, ஊதிய உயர்வு, பணி ஓய்வு அனுமதி, ஓய்வூதிய பலன்கள் கிடைக்கவில்லை.

கொரோனாவால் அடித்த ஜாக்பாட் – 33 ஆண்டுகள் கழித்து 10ம் வகுப்பில் பாஸ் ஆன 51 வயது நபர்!!

நீதிமன்ற நடவடிக்கைகளும் தொடர்கின்றன.மேலும், நிர்வாகிகள் பலர் ஓய்வு பெறும் நாளுக்கு முன், சஸ்பெண்ட் செய்யப்பட்டு உள்ளனர். அவர்களுக்கான ஓய்வூதிய பலன்கள் கிடைக்காமல், நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இது, கொரோனாவை விட, கொடிய பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த நடவடிக்கைகள் அனைத்தையும் அரசு ரத்து செய்ய வேண்டும் என்று மனுவில் கூறப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here