ரஜினியுடன் கை கோர்க்கும் பாலிவுட் வில்லன் – ‘ஜெயிலர்’ அப்டேட் வெளியீடு!!

0
ரஜினியுடன் கை கோர்க்கும் பாலிவுட் வில்லன் - 'ஜெயிலர்' அப்டேட் வெளியீடு!!
ரஜினியுடன் கை கோர்க்கும் பாலிவுட் வில்லன் - 'ஜெயிலர்' அப்டேட் வெளியீடு!!

சூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில் தயாராகி வரும் ‘ஜெயிலர்’ திரைப்படத்தில் பாலிவுட் நடிகர் ஜாக்கி ஷெராப் இணைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

ஜெயிலர் திரைப்படம்

பிரபல தமிழ் திரைப்பட இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில், நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் தயாரிக்கப்பட்டு வரும் திரைப்படம் ‘ஜெயிலர்’. இந்த திரைப்படத்தில் பிரபல கன்னட நடிகர் சிவராஜ்குமார், மலையாள நடிகர் மோகன்லால், தெலுங்கு நடிகர் சுனில், நடிகைகள் ரம்யா கிருஷ்ணன், தமன்னா, நகைச்சுவை நடிகர் யோகி பாபு என பலர் நடித்து வருகின்றனர்.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்த திரைப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார் என்பது அனைவரும் அறிந்த தகவல். தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வரும் ‘ஜெயிலர்’ திரைப்படத்தில், பாலிவுட் நடிகர் ஒருவர் இணைந்துள்ளதாக அறிவிப்புகள் வெளியாகியுள்ளது. அதாவது, பாலிவுட் நடிகர் ஜாக்கி ஷெராப் ‘ஜெயிலர்’ திரைப்படத்தில் இணைந்துள்ளார்.

வசூலில் புதிய சாதனை நிகழ்த்திய ‘பதான்’…,11 நாட்களில் இவ்வளவு தொகையா…,

இந்த தகவலை படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. நடிகர் ஜாக்கி ஷெராப் ஏற்கனவே தமிழில் ‘ஆரண்யகாண்டம்’ மற்றும் ‘பிகில்’ உள்ளிட்ட திரைப்படங்களில் வில்லன் வேடங்களில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இருந்தாலும், ‘ஜெயிலர்’ திரைப்படத்தில் நடிகர் ரஜினி மற்றும் ஜாக்கி ஷெராப் மோதும் காட்சிகளை காண ரசிகர்கள் ஆர்வமடைந்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here