“மீட் டைகர் முத்துவேல் பாண்டியன்”.., சூப்பர் ஸ்டாரின் “ஜெயிலர்” படத்தின் ட்ரைலர் வெளியீடு!!

0
"மீட் டைகர் முத்துவேல் பாண்டியன்".., சூப்பர் ஸ்டாரின் "ஜெயிலர்" படத்தின் ட்ரைலர் வெளியீடு!!

தமிழ் சினிமாவில் 90ஸ் காலகட்டத்தில் இருந்து தற்போது வரை சூப்பர் ஸ்டாராக ஜொலித்து கொண்டிருப்பவர் தான் நடிகர் ரஜினிகாந்த். தற்போது நெல்சன் திலீப்குமார் படைப்பில் பிரம்மாண்டமாக உருவான திரைப்படம் தான் ஜெயிலர். இந்த படத்தில் ரஜினியுடன் இணைந்து ஏகப்பட்ட நடிகர்கள் நடித்துள்ளனர். சமீபத்தில் இப்படத்தில் இடம்பெற்ற பாடல்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

சொல்லப்போனால் காவலா பாடலுக்கு தமன்னா ஆடிய ஆட்டத்துக்கு ஆடிப் போகாத இளைஞர்களே இருக்க முடியாது. பெரிய எதிர்பார்ப்பில் இருக்கும் இந்த திரைப்படம் வருகிற ஆகஸ்ட் 10ம் தேதி திரைக்கு வர இருக்கிறது. இந்நிலையில் படக்குழு ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதாவது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ஜெயிலர் படத்தின் டிரைலர் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. அதை பார்த்த ரசிகர்கள் ஒரு முறை தான் தவறும் என்று ரஜினி பேமஸ் வசனத்தை பதிவிட்டு ட்ரைலர் தலைவரு தெறிக்க விட்டு இருக்காரு என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.

ஐயயோ.., காட்டுன வரைக்கும் போதும்.., ப்ளீஸ் தாங்க முடியல.., திணறவிடும் பூனம் பாஜ்வா!!

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here