ரஜினிகாந்தை வைத்து ‘ஜெயிலர்’ திரைப்படத்தை இயக்கிய நெல்சன் திலீப்குமார் மீண்டும் தான் ஒரு சிறந்த இயக்குனர் என்பதை தமிழ் சினிமாவுக்கு நிரூபித்திருக்கிறார். ‘பீஸ்ட்’ தோல்விக்குப் பிறகு ‘ஜெயிலர்’ படத்தை பெரிதும் எதிர்பார்த்த நெல்சனுக்கு எல்லாம் நல்ல விதமாக முடிந்திருக்கிறது. அந்த வகையில், கடந்த மாதம் வெளியான ‘ஜெயிலர்’ உலகளவில் 600 கோடிக்கு மேல் வசூல் குவித்துள்ளது.
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
இந்த சந்தோஷத்தை கொண்டாடித் தீர்ப்பதற்குள் ‘ஜெயிலர்’ படத்தின் தயாரிப்பு நிறுவனம் அவருக்கு சர்பிரைஸ் கிஃப்ட் ஒன்றை கொடுத்துள்ளது. அதாவது, ‘ஜெயிலர்’ படத்திற்கான சம்பள காசோலையை தயாரிப்பாளர் கலாநிதி மாறனிடம் இருந்து வாங்கிய கையோடு Porsche சொகுசு காரையும் பரிசாகப் பெற்றுள்ளார் நெல்சன். இந்த காரின் மதிப்பு ஒரு கோடி ரூபாயைத் தாண்டும் என்பது கூடுதல் தகவல்.