
தமிழகத்தில் பெரும்பாலான பகுதிகளில்10 ரூபாய் நாணயங்கள் செல்லாது என்று மக்கள் நினைக்கின்றனர். கடைகள் மட்டுமின்றி தற்போது அரசு அலுவலகங்களில் கூட பத்து ரூபாய் நாணயங்கள் வாங்க மறுப்பதாக சொல்லப்படுகிறது. ஆனால், பத்து ரூபாய் நாணயங்களை வாங்க மறுப்பது சட்டப்படி குற்றமாகும். மேலும் 10 ரூபாய் நாணயத்தை மறுப்பவர்கள் மற்றும் செல்லாது என்று சொல்லுபவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க முடியும்.
அதாவது, இந்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட பத்து ரூபாய் நாணயங்களை வாங்க மறுப்பவர்கள் மீது புகார் அளித்தால், இந்திய தண்டனைச் சட்டம் 124 பிரிவு ஏ-வின் படி சட்டப்படி குற்றம். எனவே, இந்த குற்றத்திற்கு மூன்று வருட சிறை தண்டனையும், அபராதமும் விதிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.