அடுத்தடுத்து பல விருதுகளை அள்ளி குவித்த ஜெய் பீம் – சர்வதேச திரைப்பட விழாவில் சாதனை!!

0

சூர்யா நடிப்பில் வெளியான ஜெய்பீம் திரைப்படம் தொடர்ந்து பல விருதுகளை அள்ளி குவித்து வருகிறது. மேலும் நேற்று நடந்த NOIDA சர்வதேச திரைப்பட விழாவில் ஜெய்பீம் திரைப்படத்திற்கு மட்டுமே மூன்று விருதுகள் கிடைத்துள்ளது.

ஜெய்பீம் திரைப்படம்:

ஞானவேல் இயக்கத்தில், சூர்யா நடிப்பில் உருவாக்கப்பட்ட ஜெய்பீம் திரைப்படம் கடந்த நவம்பர் 2 அன்று வெளியானது. 1993 ஆம் ஆண்டில் பார்வதியம்மாளின் வாழ்க்கையில் நடந்த உண்மை சம்பவத்தை வைத்தே இந்த திரைப்படத்தின் கதை சித்தரிக்கப்பட்டிருந்தது. இந்த திரைப்படத்திற்கு பிறகே பார்வதியம்மாள் பட்ட துயரங்கள் அனைத்தும் வெட்ட வெளிச்சமானது. தமிழ் சினிமா துறையிலே முதன் முறையாக இந்த திரைப்படத்தின் காட்சிகள் ஆஸ்கர் யூடியூப் பக்கத்தில் இடம்பெற்றது.

இந்நிலையில் NOIDA சர்வதேச திரைப்பட விழா நேற்று நடைபெற்றது. அதில் 50க்கும் மேற்பட்ட நாடுகளில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட படங்கள் பங்கேற்றன. இந்த விருது வழங்கும் விழாவில் சிறந்த படத்திற்கான விருதை ஜெய் பீம் பெற்றது. மேலும் சிறந்த நடிகருக்கான விருதை சூர்யாவும், சிறந்த நடிகைக்கான விருதை லிஜோமோல் ஜோஸ்ஸும் பெற்றுள்ளனர். ஜெய் பீம் திரைப்படம் மட்டுமே மூன்று விருதுகளை அள்ளி குவித்ததால் படக்குழுவினர் மகிழ்ச்சியில் உள்ளனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here