சூர்யாவின் ஜெய் பீம் பட சர்ச்சை – தரமான தீர்ப்பு வழங்கி வழக்கை முடித்து வைத்த நீதிபதி!

0
சூர்யாவின் ஜெய் பீம் பட சர்ச்சை - தரமான தீர்ப்பு வழங்கி வழக்கை முடித்து வைத்த நீதிபதி!

ஜெய் பீம் படத்தில் வன்னிய சமுதாயத்தினரை இழிவுபடுத்தும் வகையில் காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளதாக புகார் தெரிவித்து வழக்கு தொடரப்பட்டது. தற்போது இந்த வழக்கை உயர் நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.

ஜெய் பீம்:

கடந்த 2021-ம் ஆண்டு இயக்குநர் ஞானவேல் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடித்த படம் ஜெய் பீம். இந்த படத்தில் மக்கள் படும் இன்னல்களை மையமாக கொண்ட ஒரு உண்மை சம்பவத்தை தழுவி எடுக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தில் குறிப்பிட்ட சமூக மக்களின் மனதை புண்படுத்தும் வகையிலும் அவர்களை இழிவு படுத்தியதாக இயக்குநர் ஞானவேல் மற்றும் சூர்யா உள்ளிட்டோர் மீது ருத்ர வன்னியர் சேனா அமைப்பின் நிறுவன தலைவர் சந்தோஷ் வழக்கு தொடுத்தார். இதனை மறுத்து நடிகர் சூர்யா மற்றும் இயக்குனர் ஞானவேல் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு அளித்தனர்.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

இதனை தொடர்ந்து இன்று இந்த மனு நீதிபதி சதீஷ்குமார் முன் விசாரணைக்கு வந்த போது சூர்யா மற்றும் இயக்குனர் தரப்பில் இருந்து வழக்கறிஞர் வாதிட்டார். அவர் கூறியதாவது, ‘ஜெய்பீம்’ படத்தில் காட்சிப்படுத்தப்பட்ட அக்னிகுண்டம் மற்றும் மகாலட்சுமி காலண்டர் குறித்த காட்சிகள் படத்தில் இருந்து நீக்கப்பட்டு விட்டதாகவும், குறிப்பிட்ட சமூகத்தினரை இழிவுபடுத்தும் வகையில் காட்சி அமைக்கப்பட்டதாக கூறும் அளவிற்கு எவ்வித ஆதாரங்களும் இல்லை என்று வாதாடினார். இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதி வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here