நெட்ஃபிளிக்ஸில் ‘ஜகமே தந்திரம்’ – வெளியாகும் தேதி அறிவிப்பு!!!

0

நெட்ஃபிளிக்ஸ் தளத்தில் நேரடியாக வெளியாகவிருக்கும் ’ஜகமே தந்திரம்’ திரைப்படத்தின் தேதி அதிகார பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Youtube  => Subscribe செய்ய கிளிக் பண்ணுங்க!!

நெட்ஃபிளிக்ஸில் ‘ஜகமே தந்திரம்’

தனுஷ் நடித்திருக்கும் ‘ஜகமே தந்திரம்’ படத்தின் ட்ரைலர் ஜூன் 1-ம் தேதி வெளியாவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷ், ஹாலிவுட் நடிகர் ஜேம்ஸ் காஸ்மோ, ஐஸ்வர்யா லட்சுமி, லால் ஜோஸ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

கடந்த பிப்ரவரி 22ஆம் இப்படத்தின் டீசர் வெளியாகி வரவேற்பை பெற்ற நிலையில், கடந்த வாரம் இப்படத்தின் மூன்றாவது பாடல் வெளியாகி அனைவரது கவனத்தையும் ஈர்ததது. ‘ஜகமே தந்திரம்’ ஓடிடி ரிலீஸுக்கு நடிகர் தனுஷும், இயக்குநர் கார்த்திக் சுப்பராஜும் கடுமையான எதிர்ப்பு தெரிவித்திருந்தார்கள்.

ஆனாலும் அந்தத் திரைப்படம் நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் ஜூன் 18-ம் தேதி ரிலீசாகும் என படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர். இந்நிலையில் படத்தின் ட்ரைலர் வரும் ஜூன் 1-ம் தேதி வெளியாகும் என இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் தனது ட்விட்டரில் அறிவித்துள்ளார்.

Telegram Channel  => Join செய்ய கிளிக் பண்ணுங்க!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here