இந்திய அணிக்கு திரும்ப முதல் அடி எடுத்து வைத்த ஜடேஜா…, அடுத்த இலக்கு குறித்து அவர் கொடுத்த ஹிண்ட்!!

0
இந்திய அணிக்கு திரும்ப முதல் அடி எடுத்து வைத்த ஜடேஜா..., அடுத்த இலக்கு குறித்து அவர் கொடுத்த ஹிண்ட்!!
இந்திய அணிக்கு திரும்ப முதல் அடி எடுத்து வைத்த ஜடேஜா..., அடுத்த இலக்கு குறித்து அவர் கொடுத்த ஹிண்ட்!!

இந்திய அணியின் ஆல் ரவுண்டரான ஜடேஜா, ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரில் களமிறங்க இது தான் முதல் இலக்கு என்று குறிப்பிட்டு உள்ளார்.

ஜடேஜா:

இந்திய அணி வரும் பிப்ரவரி மாதம் 9ம் தேதி முதல் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக பார்டர் கவாஸ்கர் டிராபியில் விளையாட இருக்கிறது. இந்த டிராபியில், இந்தியாவின் ஆல் ரவுண்டரான ஜடேஜா உடற் தகுதி பொறுத்து இடம் பெறுவார் என பிசிசிஐ அறிவித்திருந்தது. இதனால், இந்தியாவின் உள்ளூர் போட்டியில் விளையாடி உடற் தகுதியை நிரூபிக்க வேண்டும் என ஜடேஜாவுக்கு பிசிசிஐ விதித்திருந்தது.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இதன் விளைவாக, ரஞ்சி டிராபியில் சௌராஷ்டிரா அணி சார்பாக இன்று ஜடேஜா, தமிழ் நாடு அணிக்கு எதிராக விளையாட உள்ளதாக அறிவித்திருந்தார். இந்த போட்டிக்கு முன்பு ஜடேஜா, கிட்டதட்ட ஆறு மாதங்களுக்கு பிறகு, நான் மீண்டும் களத்திற்கு வந்ததில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன் என்று கூறியுள்ளார்.

விக்கெட் கீப்பிங்கில் தோனிக்கு பிறகு இந்திய அணியில் யார் இருப்பார்?? ராகுல் டிராவிட் ஓபன் டாக்!!

இதனை தொடர்ந்து, தற்போது 100 சதவீத உடற்தகுதி பெற வேண்டும் என்பதே முதல் இலக்கு என்று தெரிவித்துள்ளார். மேலும், அறுவை சிகிச்சைக்கு பிறகு எனது கால்கள் எப்படி விளையாடுகிறது என்று பார்ப்போம் என்று கூறியுள்ளார். ஆஸ்திரேலிய தொடருக்கு முன் இந்த போட்டி எனக்கு மிகுந்த நம்பிக்கையை தரும் என்று தெரிவித்தள்ளார். ரஞ்சி டிராபியின் சௌராஷ்டிராவுக்கு எதிரான போட்டியில், தமிழ் நாடு அணி டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்து விளையாடி வருகிறது. உணவு இடைவேளைக்கு முன்பு வரை ஜடேஜா 5 ஓவர் வீசி 9 ரன்களை விட்டு கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here