80 வயசு மேற்பட்டவர்களுக்கு அடித்த ஜாக்பாட்.., இனி சூப்பரா வருமானம் பார்க்கலாம்!!

0
மாநிலம் முழுவதும் பண்டிகை கால சிறப்பு போனஸ் - குஷியில் அரசு ஊழியர்கள்!!

பஞ்சாப் நேஷனல் வங்கி., ஃபிக்சட் டெபாசிட் திட்டங்களுக்கு வட்டி விகிதத்தை உயர்த்தியுள்ளது. வட்டி விகிதம் குறித்த முழு விவரங்களை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

வட்டி விகிதம் உயர்வு:

அண்மையில் ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா மற்றும் எச்டிஎஃப்சி போன்ற தேசிய வங்கிகள் உட்பட சில நிதி நிறுவனங்களின் ஃபிக்சட் டெபாசிட் வட்டி விகிதங்களை உயர்த்தியுள்ளது. அந்த வகையில் தற்போது பொதுத்துறை வங்கியான பஞ்சாப் நேஷனல் வங்கி, சீனியர் சிட்டிசன்கள் (60 வயதுக்கு மேற்பட்டவர்கள் ) மற்றும் சூப்பர் சீனியர் (80 வயதுக்கு மேற்பட்டவர்கள்) சிட்டிசன்களுக்கான ஃபிக்சட் டெபாசிட் வட்டி விகிதங்களை உயர்த்தியுள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

இந்த புதிய வட்டி விகிதங்கள் கடந்த செப்டம்பர் 13ஆம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளது. இதன் அடிப்படையில் 2 கோடி ரூபாய்க்கு உட்பட்ட ஃபிக்சட் டெபாசிட்டுகளுக்கு 0.50% வரை வட்டி விகிதம் உயர்த்தப்பட்டு உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. மேலும் இந்த வட்டி விகிதம் உயர்வால் ஏற்கனவே போடப்பட்ட டெபாசிட்டுகளும், புதிய டெபாசிட்டுகளுக்கும் அதிக லாபம் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

1 ஆண்டு: மூத்த குடிமக்களுக்கு – 6.00%; சூப்பர் மூத்த குடிமக்களுக்கு – 6.30%

1 வருடம் முதல் 404 நாட்கள் வரை: மூத்த குடிமக்களுக்கு – 6.00%; ; சூப்பர் மூத்த குடிமக்களுக்கு – 6.30 %

405 நாட்கள்: மூத்த குடிமக்களுக்கு – 6.60%; சூப்பர் மூத்த குடிமக்களுக்கு – 6.90%

406 நாட்கள் முதல் 2 ஆண்டுகள் வரை: மூத்த குடிமக்களுக்கு – 6.00% ; சூப்பர் மூத்த குடிமக்களுக்கு – 6.30 %

2 ஆண்டுகள் முதல் 3 ஆண்டுகள் வரை: மூத்த குடிமக்களுக்கு – 6.10% ; சூப்பர் மூத்த குடிமக்களுக்கு – 6.40 %

3 ஆண்டுகள் முதல் 5 ஆண்டுகள் வரை: மூத்த குடிமக்களுக்கு – 6.25% ; சூப்பர் மூத்த குடிமக்களுக்கு – 6.55 %

5 ஆண்டுகள் முதல் 10 ஆண்டுகள் வரை: மூத்த குடிமக்களுக்கு – 6.45 % ; சூப்பர் மூத்த குடிமக்களுக்கு – 6.45 %

1111 நாட்கள்: மூத்த குடிமக்களுக்கு – 6.25 % ; சூப்பர் மூத்த குடிமக்களுக்கு – 6.55 %

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here