தமிழக ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஜாக்பாட் அறிவிப்பு – ஜனவரி 3 முதல் பொங்கல் பரிசு!

0

தமிழகத்தில் 2022ம் ஆண்டுக்கான பொங்கல் பரிசுத்தொகுப்பு ஜனவரி 3ம் தேதி முதல் அனைத்து ரேஷன் கடைகளிலும் வழங்கப்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. மேலும் இத்திட்டத்தை சிறப்பாக செயல்படுத்த மாவட்ட ஆட்சியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

பொங்கல் பரிசுத்தொகுப்பு:

தமிழகத்தில் ஆண்டுதோறும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரேஷன் கடைகள் மூலம் ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் வைக்க தேவையான பொருட்கள், பரிசுத்தொகை, இலவச வேட்டி, சேலை போன்றவைகள் வழங்கப்படும். அதே போல 2022ம் ஆண்டு பொங்கல் பண்டிகைக்கும் அரசு பொங்கல் பரிசுத்தொகுப்பை அறிவித்துள்ளது.

இதில் பொங்கல் வைக்க தேவையான பொருட்களை தவிர மளிகை பொருட்களும் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன் படி பச்சரிசி, வெல்லம், முந்திரி, திராட்சை, ஏலக்காய், பாசிப்பருப்பு, நெய், மஞ்சள் தூள், மிளகாய் தூள், கடுகு, சீரகம், மல்லி தூள், மிளகு, புளி, கோதுமை மாவு, ரவை, உப்பு, மிளகு, உளுத்தம் பருப்பு, கடலைப் பருப்பு ஆகிய பொருள்கள் வழங்கப்படும் என்று கூறப்பட்டு உள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

பொங்கல் பரிசுத் தொகுப்பில் நெய் வழங்கப்படுவது இதுவே முதல் முறையாகும். மேலும் விவசாயிகள் கோரிக்கையை ஏற்று ஒரு குடும்பத்திற்கு ஒரு கரும்பும் வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பொங்கல் பண்டிகைக்கு இன்னும் சில வாரங்களே உள்ள நிலையில் 2,15,48,060 குடும்பங்களுக்கு பொருட்கள் வழங்கப்பட உள்ளதால் பரிசுத் தொகுப்பில் வைக்கப்படும் பொருட்களை கொள்முதல் செய்யும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

கடந்த அதிமுக பொங்கல் பரிசுத் தொகையாக 2000 ரூபாய் அளிக்கப்பட்டது. ஆனால் 2022ம் ஆண்டு பொங்கல் பரிசுத் தொகுப்பில் ரொக்க பரிசுத்தொகை குறித்த எந்த அறிவிப்புகளும் இடம்பெறவில்லை. இதனால் ரேஷன் அட்டைதாரர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.

Pongal Bonus

இந்த நிலையில் பொங்கல் பண்டிகை நெருங்கி வரும் நிலையில் அரசு அறிவித்துள்ள பொங்கல் பரிசுத்தொகுப்பு ஜனவரி 3ம் தேதி முதல் தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து ரேஷன் கடைகளிலும் வழங்கப்படும் இரு அரசு தெரிவித்துள்ளது. மேலும் இந்த திட்டத்தை அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் ஒருங்கிணைந்து சிறப்பாக செயல்படுத்த அரசு ஆட்சியாளர்களுக்கு உத்தரவிட்டுள்ளது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here