கொரோனா வைரஸிற்கு மருந்து கண்டுபிடித்தால் ரூ. 1 கோடி பரிசுத்தொகை – ஜாக்கி சான்..!

0

பிரபல ஹாலிவுட் நடிகர் ஜாக்கி சான் கொரோனா வைரஸிற்கு எதிரான மருந்து கண்டுபிடித்தால் ரூ. 1 கோடி பரிசுத்தொகை வழங்கப்படும் என அறிக்கை ஒன்றை வெளியிட்டு உள்ளார்.

அதிகரிக்கும் உயிரிழப்புகள்

சீனாவின் ஹவான் நகரில் பரவிய கொரோனா வைரஸினால் சீனாவில் இதுவரை 1000க்கும் மேற்பட்டோர் உயிரிழந்து உள்ளனர். வைரஸ் மேலும் பரவி வருவதால் உயிரிழப்புகள் மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது. மேலும் உலகம் முழுவதும் 37 ஆயிரத்திற்கும் அதிகமானவர்கள் இந்த வைரஸினால் பாதிக்கப்பட்டு உள்ளதாகவும் உலக சுகாதார மையம் தெரிவித்து உளள்து.

Image result for whatsapp logo

வாட்ஸ்ஆப் இல் தகவல்களைப் பெறஇங்கே கிளிக்செய்யவும்

இதற்கான தடுப்பு நடவடிக்கைகளிலும் சீனா அரசு தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. மேலும் அதற்கு மருந்து தயாரிக்கும் முயற்சியிலும் பல நாடுகளை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

சீனாவில் இதுவரை 50 ஆயிரம் பேர் உயிரிழப்பு..? தினமும் 1,200 சடலம் எரிக்கப்படுவதாக அதிர்ச்சி தகவல்..!

1 மில்லியன் யென்

ஹாலிவுட் நடிகர் ஜாக்கி சான் இது குறித்து வெளியிட்ட அறிக்கையில் கொரோனா வைரஸினால் தினமும் பல உயிர்கள் பலியாகிறது. இதனை தடுக்க விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்பம் மிக அவசியம். என்னுடைய நண்பர்கள் கொரோனா வைரசால் உயிர் இழப்பதை என்னால் பார்க்க முடியவில்லை.

Image result for telegram logo

டெலிகிராம் இல் தகவல்களைப் பெற இங்கே கிளிக் செய்யவும்

எனவே கொரோனா வைரஸிற்கு குழுவாகவோ அல்லது தனி மனிதராகவோ மருந்து கண்டுபிடிப்பவர்களுக்கு 1 மில்லியன் யென் (இந்திய மதிப்பில் ரூ. 1 கோடிக்கும் மேல்) பரிசுத்தொகையாக வழங்கப்படும் என தெரிவித்து உள்ளார். மேலும் இந்த அறிவிப்பு பணத்தை பொருட்டாக கொண்டது இல்லை அங்கே எனது நண்பர்கள் உயிருக்காக போராடுவதை என்னால் பார்க்க முடியவில்லை எனவும் தெரிவித்து உள்ளார்.

To Subscribe Youtube Channel Click Here
To Join WhatsApp Group Click Here
To Join Telegram ChannelClick Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here