அது “ஓ சொல்றியா” இல்ல…”ஊ சொல்றியா” – சமந்தா ஐட்டம் சாங் பற்றி பாடலாசிரியர் விவேகா பேட்டி!!

0

புஷ்பா படத்தில், நடிகை சமந்தா ஆடிய ஐட்டம் சாங் பாடல் குறித்து பிரபல பாடலாசிரியர் விவேகா பரபரப்பு பேட்டி ஒன்றை அளித்துள்ளார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

பாடல் ஆசிரியர் விளக்கம்:

தெலுங்கு சூப்பர் ஸ்டார் அல்லு அர்ஜுன் நடிப்பில் உருவாகி, அண்மையில் ரிலீஸான திரைப்படம் புஷ்பா. இந்த படத்தில் இவருக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார். இந்த படத்தில், இதுவரை இல்லாத அளவில் முன்னணி நடிகையாக உள்ள சமந்தா முதல் முறையாக ஐட்டம் சாங் ஒன்றுக்கு குத்தாட்டம் போட்டுள்ளார்.

பலரையும் வியப்புக்குள்ளாக்கிய இந்த பாடல் அண்மையில் ஒரு சர்ச்சையில் சிக்கியது. அதாவது இந்தப் பாடல், ஆண்களை பெண்களின் பின்னால் சுற்றும் கேவலமானவர்கள் ஆக காட்டுவதாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்தப் பாடல் குறித்து பிரத்தியேக பேட்டி ஒன்றை பிரபல பாடலாசிரியர் விவேகா அளித்துள்ளார்.

அதாவது இந்த பாடலை ஓ சொல்றியா மாமா ஓஒ சொல்றியா மாமா என்று குறிப்பிடுகின்றனர். இது அப்படி வராது, அதன் உண்மையான வரிகள் ஊ சொல்றியா மாமா ஊஹூ சொல்றியா மாமா என்பதுதான் என தெரிவித்துள்ளார். மேலும் இதுக்கு ஆண்கள் சங்கம் எதிர்ப்பு சொல்லலாம், ஆனால் ஒட்டுமொத்த ஆண்கள் கூட்டமும் இந்த பாடலை தியேட்டரில் கொண்டாடுகின்றனர் என குறிப்பிட்டுள்ளார்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here