30 கிலோ தங்கம் கடத்தல் சம்பவம் ஐ.டி அதிகாரி கைது – கேரளா அரசுக்கு சிக்கல்..!

0

திருவனந்தபுரத்தில் உள்ள ஐக்கிய அரபு அமீரக தூதரகத்திற்கு வந்த கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவத்தில் கேரளா அரசின் தகவல் தொழிலநுட்ப அதிகாரி ஸ்வப்னா சுரேஷ் கைது செய்யப்பட்டுள்ளார்.

கடத்தல் தங்கம்..!

முன்னதாக இருந்த வழக்கில் சுங்க துறை அதிகாரிகளுக்கு கேரளா தரப்பு அரசின் இருந்து ஸ்வப்னா சுரேஷை விடுவிக்குமாறு அழுத்தம் கொடுத்ததாக பா.ஜா.க தரப்பில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

திருவனந்தபுரம் விமான நிலை அதிகாரிகள் சமீபத்தில் அங்குள்ள சரக்கு முனையத்தில் கடத்தல் தங்கத்தினை கைப்பற்றினர். அவர்களுக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் சோதனை நடத்தியதில் கடத்தபட்ட தங்கத்தின் மதிப்பு 30 கிலோ என தெரியவந்தது. சில நாட்களுக்கு முன்னதாக சரக்கு விமானம் ஒன்றின் மூலம் அந்த பெட்டகமானது ஐக்கிய அரபு அமீரகத்துக்கு திருவனந்தபுரம் விமான நிலையத்தை வந்தடைந்தது.

பின்னர் விசாரணையில் தங்கம் துபாயில் இருந்து வந்தது என்றும் இது திருவனந்தபுரத்தில் உள்ள ஐக்கிய அரபு அமீரக தூதரகத்திற்கு அனுப்பப்பட்டது என்று சுங்க அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் அந்த பெட்டகத்தை மத்திய வெளியுறவுத் துறையின் அனுமதியுடன் திறந்து பார்க்கையில் 30 கிலோ தங்கம் என்பது தெரியவந்தது.

கொரோனாவிற்கு சித்த மருத்துவரின் ‘இம்பரோ பொடி’ – சோதித்துப் பார்க்க நீதிமன்றம் உத்தரவு!!

ஐக்கிய அரபு அமீரக தூதரகத்தில் முறைகேடு..!

இந்நிலையில் அந்த பெட்டகத்தை பெற்றுக்கொள்ள வந்த ஸ்ரித் என்பவரை கைது செய்தனர். அவர் ஐக்கிய அரபு அமீரகத்தின் முன்னாள் ஊழியர் என்பது கண்டுபிடிக்கப்பட்டு அவர் முறைகேட்டில் ஈடுபட்டதாக ஸ்ரித் பணியில் இருந்து நீக்கப்பட்டதாகவும் பிறகு அவர் தூதரக அதிகாரிகளுடன் தொடர்பில் இருந்து தூதரகத்தின் பெயரில் ஏராளமான தங்கத்தை கேரளத்துக்குள் கடத்தப்பட்டது தெரியவந்தது.

ஸ்வப்னா சுரேஷும் ஐக்கிய அரபு அமீரகத்தில் பணியாற்றியவர். அவர் ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து வெளியேறிய பின்பும் கடத்தலுக்கு உதவியாக இருந்துள்ளார். ஐக்கிய அரபு அமீரக ஊழியர்களுக்கு வரும் உடமைகளுடன், தங்கத்தையும் தூதரகத்தின் பெயரில் முறைகேடு செய்வது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் கேரளா அரசின் தொழில்நுடபத் துறையில் ஸ்வப்னா சுரேஷ் வகித்து வரும் பதிவில் இருந்து நீக்கப்பட்டதாகவும் அவர் ஒப்பந்த பணியாளர் தான் என்று அரசு தரப்பில் கூறப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here