
சமீப காலமாக பல முன்னணி ஐ.டி. நிறுவனங்களும், தங்களது Work from home ஊழியர்களை அலுவலகத்திற்கு அழைத்த வண்ணம் உள்ளது. அந்த வகையில் இன்போசிஸ் ஐ.டி. நிறுவனம், கீழ்மட்ட ஊழியர்கள் மாதத்திற்கு 10 நாட்களாவது கண்டிப்பாக அலுவலகத்திற்கு வர வேண்டும் என அறிவித்து இருந்தது. இதைத் தொடர்ந்து இன்போசிஸ் நிறுவனர் நாராயணமூர்த்தி அவர்கள், இளைஞர்கள் வாரத்தில் 70 மணி நேரம் வேலை செய்தால் தான் பொருளாதாரத்தை மேம்படுத்த முடியும் என கூறி இருந்தார்.
Enewz Tamil WhatsApp Channel
இது பலர் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தி வரும் நிலையில், இந்நிறுவனம் “In Person Collaboration” என்பதன் மூலம் மற்றொரு புதிய அறிவிப்பையும் வெளியிட்டுள்ளது. அதாவது நடுத்தர மேலாளர், டீம் லீடர் மற்றும் ஊழியர்கள் வருகிற நவம்பர் 20ஆம் தேதி முதல் அலுவலக நாட்களை தொடர வேண்டும் என அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு இன்ஃபோசிஸ் நிறுவன ஊழியர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளதாக கூறப்படுகிறது.
தாஜ்மஹாலை கட்டியது ஷாஜஹான் கிடையாது., வரலாற்றை மாற்றனும்., உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல்!!