தனது ஆக்ரோஷமான நடிப்பால் ரசிகர்களை மிரள வைத்த ஐஸ்வர்யா… ட்ரெண்டாகும் இன்ஸ்டா வீடியோ!!!

0

பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஒரு போட்டியாளராக பங்கு பெற்று அதன் மூலம் ரசிகர்களுக்கு பரிச்சியமானவர் ஐஸ்வர்யா. இவர் தனது இன்ஸ்டாவில் ஒரு வீடியோவை வெளியிட்டு உள்ளார். அந்த வீடியோவில் தன்னுடைய அதிரடியான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார்.

தமிழ் திரையில் நகுலுக்கு ஜோடியாக நடித்து அதன் வழியாக சினிமாவுக்கு வந்தவர் ஐஸ்வர்யா. அதன் பின்னர் பாயும் புலி,ஆறாது சினம் உள்ளிட்ட படங்களில் நடித்தார். ஆனால் அவருக்கு பெயரும் புகழும் கொடுத்தது பிக் பாஸ் நிகழ்ச்சி தான். அந்த நிகழ்ச்சியில் தன்னுடைய தாறுமாறான அழகாலும், அவ்வப்போது காட்டும் குட்டி உடை கவர்ச்சியிலும் ரசிகர்களை தன் பக்கம் ஈர்த்தார். இதனால் அதிக நாட்கள் அந்த வீட்டில் தாக்குப்பிடித்த இவர், தாடி பாலாஜிக்கு எதிராக செய்த ஒரு சில செய்கைகளால் ரசிகர்களின் அன்பை இழந்தார்.

எனினும் அதற்காக அந்த நிகழ்ச்சியின் போதே பாலாஜி அவர்களிடம் மன்னிப்பு கேட்டாலும், அவரின் மீதான அபிமானம் குறையத் தொடங்கியது. இந்நிலையில் அந்த நிகழ்ச்சிக்கு பிறகு இவர் தற்போது பட வாய்ப்புகளுக்காக காத்துக்கொண்டிருக்கிறார். மேலும் அதற்காக தனது போட்டோக்கள் மற்றும் வீடியோக்களை  இணையத்தில் பதிவிட்டு வருகிறார்.

 

View this post on Instagram

 

A post shared by Aishwarya Dutta (@aishwarya4547)

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here