அரசின் நான்காம் கட்ட தங்க பத்திர வெளியீடு – ஒரு கிராம் ரூ.4,852 ஆக நிர்ணயம்..!

0

நடப்பு நிதியாண்டுக்கான மத்திய அரசின் நான்காம் கட்ட தங்க சேமிப்பு பத்திர வெளியீடு நேற்று துவங்கி வரும் 10ம் தேதி வரை நடைபெற இருக்கிறது.

இது குறித்த விபரங்கள்..!

  • இந்த நான்காம் கட்ட வெளியீட்டில் தங்கத்தின் விலை ஒரு கிராமுக்கு 4,852 ரூபாய் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
  • பத்திர வெளியீட்டு அறிவிப்புக்கு முந்தைய மூன்று வர்த்தக தினங்களில் இருந்த 999 சுத்தமான தங்கத்தின் விலையின் சராசரியைக் கொண்டு வெளியீட்டு விலை நிர்ணயிக்கப்படுகிறது.
  • வலைதளம் அல்லது மின்னணு முறையில் மேற்கொள்ளும் முதலீடுகளுக்கு ஒரு கிராமுக்கு 50 ரூபாய் தள்ளுபடி வழங்கப்படும். இதனால் கிரெடிட், டெபிட் கார்டு உள்ளிட்ட மின்னணு பணப் பரிவர்த்தனையில் தங்க பத்திரங்களை வாங்குவோருக்கு ஒரு கிராம் 4,802 ரூபாய்க்கு கிடைக்கும்.
  • இந்த தங்க பத்திரங்கள், வங்கிகள், ஸ்டாக் ஹோல்டிங் கார்ப்பரேஷன், மும்பை மற்றும் தேசிய பங்குச் சந்தைகள், தலைமை அஞ்சலகங்கள் ஆகியவற்றில் விற்பனை செய்யப்படும்.

ராக்கெட் போல உயரும் தங்கத்தின் விலை – இன்று புதிய உச்சம்!!

  • தங்க பத்திர முதலீட்டாளர்களுக்கு, ஆண்டு வட்டி விகிதம் 2.50 சதவீதமாக வழங்கப்படுகிறது. இந்த வட்டி வருமானம், முதலீட்டாளரின் வருமானத்தில் சேர்க்கப்பட்டு, அதற்கேற்ப வரி விதிக்கப்படும்.
  • தங்க பத்திரங்களின் முதிர்வு காலம் எட்டு ஆண்டுகள் ஆகும். இருப்பினும், முதலீட்டாளர்கள் ஐந்தாம் ஆண்டுகளுக்குப் பிறகு வெளியேற விருப்பம் இருப்பின் வெளியேறலாம்.
  • இந்த தங்க பத்திர முதலீட்டில், முதிர்ச்சியின்போது , மூலதன ஆதாய வரி விதிக்கப்படாது என்பது, வேறு எதிலும் இல்லாத தனிப்பட்ட சிறப்பாகும்.
  • மத்திய அரசு தங்கம் இறக்குமதியை குறைக்கும் நடவடிக்கையில் ஒன்றாக 2015 நவம்பரில் தங்க சேமிப்பு பத்திர திட்டத்தை அறிவித்தது. இதில் தங்கத்தை ஆவண வடிவில் சேமிக்கலாம். ஒரு கிராம் தங்கம் ஒரு ‘யூனிட்’ என்ற கணக்கில் வழங்கப்படும்.
  • நடப்பு நிதியாண்டில் இந்த தங்க பத்திரங்கள் ஆறு கட்டங்களாக ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையிலான காலகட்டத்தில் வெளியிடப்பட உள்ளது.
  • பொதுவாக உள்நாட்டில் தங்கத்தின் விலை புதிய உச்சத்தை தொடும்போது அரசு இந்த தங்க பத்திர வெளியீட்டை மேற்கொள்ளும்.
  • அரசின் நான்காம் கட்ட தங்க பத்திர வெளியீடு வரும் 10ம் தேதியுடன் முடிவடைகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here