Friday, April 19, 2024

இன்று விண்ணில் பாய்கிறது பிஎஸ்எல்வி சி 50 ராக்கெட் – இஸ்ரோ தகவல்!!

Must Read

இந்தியாவின் விண்வெளி ஆராய்ச்சி மையமான இஸ்ரோ இன்று பிற்பகலில் தகவல் தொடர்பிற்கான செயற்கைகோளுடன் பிஎஸ்எல்வி சி 50 ராக்கெட்டை விண்ணில் செலுத்த இருப்பதாக தகவல் தெரிவித்துள்ளது.

கொரோனா பரவல்:

கொரோனா நோய்ப்பரவல் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் இஸ்ரோ தனது ஆராய்ச்சி பணிகளை நிறுத்தி வைத்திருந்தது. தற்போது நோய்ப்பரவல் குறைந்துள்ள காரணத்தினால் கடந்த மாதம் முதல் தனது ஆராய்ச்சி பணிகளை துவங்கியுள்ளது. இந்நிலையில் நவம்பர் மாதம் 7ம் தேதி பிஎஸ்எல்வி சி 49 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது.

Telegram Channel => Join செய்ய கிளிக் பண்ணுங்க!!

isro to launch pslv c50
isro to launch pslv c50

இதை தொடர்ந்து பிஎஸ்எல்வி சி 50 ராக்கெட் திட்டம் துவங்கப்பட்டு, தற்போது விண்ணில் பாய்வதற்கு தயாராக உள்ளது. இன்று காலை 6:45 மணி அளவில் விண்ணில் செலுத்த திட்டமிட்டிருந்த நிலையில் கடைசி நேர கவுண்டவுனில் சில மாற்றம் செய்யப்பட்டு இன்று பிற்பகலில் 3:41 மணிக்கு விண்ணில் இருக்கிறது. ஆந்திரா மாநிலத்தை சேர்ந்த ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதிஷ் தவண் ஆராய்ச்சி மையத்தின் இரண்டாவது ஏவுதளத்தில் இருந்து ஏவப்பட்ட இருக்கிறது.

செயற்கைகோளின் சிறப்பு அம்சங்கள்:

ஆறு உந்து சக்தியுடன் உருவாக்கப்பட்ட இந்த ராக்கெட்டில் தகவல் தொடர்பு சேவைக்கான அதிநவீன சிஎம்எஸ் 1 செயற்கைக்கோள் செலுத்தப்பட உள்ளது. இந்தியாவின் தகவல் தொடர்பு சேவைக்காக இதுவரையில் 41 செயற்கைகோள்கள் செலுத்தப்பட்டுள்ளது. இந்த செயற்கைகோள் இந்தியாவின் தகவல் தொடர்பு துறையில் மேம்பட்ட வசதிகளை வழங்குவதற்காக உருவாக்கப்பட்டு உள்ளது.

தனம், மூர்த்தியின் மீது சந்தேகப்படும் முல்லை – ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ இன்றைய எபிசோடு!!

42வது செயற்கைகோளாக செலுத்தப்பட உள்ள சிஎம்எஸ் 1 செயற்கைக்கோள் 1400 கிலோ எடை கொண்டது. இதன் ஆயட்காலம் 7 ஆண்டுகளாகும். வானிலை பயன்பாடு மற்றும் நீட்டிக்கப்பட்ட C BAND அலைக்கற்றை தேவைகளுக்காவே இந்த செயற்கைகோள் அனுப்பப்படுகிறது.கடந்த 2011 ம் ஆண்டு அனுப்பப்பட்ட ஜிசாட் 12 செயற்கைகோளின் ஆயற்காலம் முடிந்துவிட்டதால் அதற்கு மாற்றாக இந்த சிஎம்எஸ் 1 செயற்கைக்கோள் தகவல் தொடர்பிற்காக அனுப்பப்படுகிறது..

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

லோக்சபா தேர்தல் எதிரொலி: சென்னை தாம்பரம் to நெல்லைக்கு சிறப்பு ரயில்., தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிவிப்பு!!!

தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் லோக்சபா தேர்தல் வாக்குப்பதிவு, நாளை (ஏப்ரல் 19) நடைபெற உள்ளது. இதனால் சென்னை உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் தங்கி இருப்பவர்கள்...
- Advertisement -

More Articles Like This

- Advertisement -