மார்ச் 5 விண்ணில் பாய்கிறது ‘இஸ்ரோ ஜிஐசாட் 1’ செயற்கைகோள்..! எதற்காக தெரியுமா..?

0
ISRO
ISRO

ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து வரும் மார்ச் 5ம் தேதி இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ ஜிஐசாட் 1 செயற்கைக்கோளை விண்ணில் ஏவ உள்ளதாக தெரிவித்து உள்ளது.

எதற்காக தெரியுமா..?

இஸ்ரோ வானிலை ஆய்வுகள், பேரிடர் மீட்பு பணிகள் மற்றும் புவி கண்காணிப்பு பணிகளுக்காக ஜியோ இமேஜிங் செயற்கைகோள்களை ஜிஐசாட் 1 மற்றும் ஜிஐசாட் 2 என்ற பெயரில் தயாரித்து வருகிறது. அதில் ஜிஐசாட் 1 செயற்கைகோள் வரும் மார்ச் 5ம் தேதி ஆந்திராவில் உள்ள ஸ்ரீஹரிஹோட்டா சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தின், இரண்டாவது தளத்திலிருந்து மாலை 5.43 மணிக்கு விண்வெளியில் செலுத்தப்பட உள்ளது.

2,275 கிலோ எடை கொண்ட இந்த ஜிஐசாட் 1 செயற்கைகோள் ஜி.எஸ்.எல்.வி.,-எப் 10 ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்தப்பட உள்ளது. மேலும் ஜிஐசாட் 2 செயற்கைகோள் வரும் ஜூன் மாதம் விண்ணில் செலுத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

To Subscribe Youtube Channel Click Here
To Join WhatsApp Group Click Here
To Join Telegram ChannelClick Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here