‘இனி பொது இடங்களில் மாஸ்க் அணிய தேவையில்லை’ – அரசு அதிரடி!!

0

உலக முழுவதும் கொரோனா நோய்த்தொற்று பரவி வரும் நிலையில் இஸ்ரேல் நாட்டில் தற்போது கொரோனா தொற்றின் வேகம் குறைந்துள்ளது. இதன் காரணமாக தற்போது இஸ்ரேல் நாட்டில் பல தளர்வுகள் தற்போது வழங்கப்பட்டுள்ளது.

மாஸ்க் அணிதல்:

உலகம் முழுவதும் சுமார் 1 ஆண்டு காலத்திற்கும் மேலாக கொரோனா நோய்த்தொற்று பரவி மக்களை மிக அதிகமாக பாதித்து வருகிறது. இதனால் உலகம் முழுவதும் உள்ள மக்கள் தங்கள் வேலை மற்றும் வாழ்வாதாரத்தையே இழந்தனர். மேலும் அனைத்து உலக நாடுகளிலும் கொரோனா நோய் தொற்று காரணமாக பல லட்ச பேர் தங்களது உயிரை இழந்தனர். தற்போது உலகின் பல்வேறு நாடுகளில் கொரோனா தொற்று பல வகையாக பரவி வருகிறது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இதனை கட்டுப்படுத்த அனைத்து உலக நாடுகளிலும் கொரோனாவிற்கு எதிரான தடுப்பூசியை மக்களுக்கு வழங்கி வருகின்றனர். இந்நிலையில் இஸ்ரேல் நாட்டில் கொரோனவால் இதுவரை 8,36,000 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் கொரோனவால் 6,331 பேர் தங்களது உயிரை இழந்துள்ளனர். மேலும் தடுப்பூசி குறித்து சுகாதாரத்துறை தெரிவித்ததாவது, நாட்டில் இதுவரை மொத்தம் 9.3 மில்லியன் மக்கள் இரண்டு டோஸ் தடுப்பூசிகளை பெற்றுள்ளனர் என்று தெரிவித்துள்ளது.

தமிழக முதல்வர் மருத்துவமனையில் அனுமதி – பதட்டத்தில் மக்கள்!!

தற்போது அங்கு கொரோனா தோற்று குறைவதால் பல தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி சுமார் 1 ஆண்டு காலமாக நடைமுறையில் இருந்து வந்த மாஸ்க் அணிவதில் இருந்து விலக்கு அளித்துள்ளது அரசு. மேலும் கூட்டம் கூடும் இடங்களில் மட்டும் மாஸ்க் முக்கியம் என்றும் பொது இடங்களில் மாஸ்க் அணிய தேவை இல்லை என்றும் தெரிவித்துள்ளது. அதேபோல் பள்ளி மாணவர்களுக்கும் இனி வழக்கம் போல் நேரடி வகுப்புகள் இயங்கும் என்று தெரிவித்துள்ளது. இதனால் நாட்டு மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here