இந்தியன் சூப்பர் லீக்: ஒடிசாவை வீழ்த்திய மும்பை…, முதலிடத்தை தட்டி தூக்கி அசத்தல்!!

0
இந்தியன் சூப்பர் லீக்: ஒடிசாவை வீழ்த்திய மும்பை..., முதலிடத்தை தட்டி தூக்கி அசத்தல்!!
இந்தியன் சூப்பர் லீக்: ஒடிசாவை வீழ்த்திய மும்பை..., முதலிடத்தை தட்டி தூக்கி அசத்தல்!!

இந்தியன் சூப்பர் லீக் தொடரில் ஒடிசா அணியை வீழ்த்திய மும்பை அணி புள்ளிப்பட்டியலில் முன்னிலை பெற்று அசத்தியுள்ளது.

இந்தியன் சூப்பர் லீக்:

இந்தியன் சூப்பர் லீக் தொடரின் 9 வது சீசன் 11 அணிகளுக்கு இடையே விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் பங்குபெற்றுள்ள 11 அணிகளும் மற்ற அணிகளுக்கு எதிராக தலா இரு முறை போட்டியிட்டு வருகின்றனர். இந்த வகையில் நேற்று ஒடிசா அணிக்கு எதிராக மும்பை அணி மோதியது.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இதில், ஆட்டத்தின் முதல் பாதியில் இரு அணிகளும் ஒரு கோல் கூட அடிக்காத நிலையில், 0-0 என சமநிலையில் முடிந்தது. இதையடுத்து தொடங்கப்பட்ட 2வது பாதியில், தொடக்கத்தில் மும்பை அணியின் லல்லியன்சுவாலா சாங்டே கோல் ஒன்றை அடித்து அசத்தினார். இதற்கு பதிலடி கொடுக்கும் விதத்தில், ஒடிசா அணியின் டியாகோ மௌரிசியோ 62 வது நிமிடத்தில் கோல் அடித்தார்.

IND vs SL: 2023 ஐ வெற்றியுடன் தொடங்குமா இந்தியா?? இலங்கைக்கு எதிராக இன்று பலபரீட்சை…, பிளேயிங் லெவன் இதோ!!

இதன் பிறகு எழுச்சி கண்ட மும்பை அணி, 69, 80 மற்றும் 86 ஆகிய நிமிடங்களில் தொடர்ந்து 3 கோல்களை அடித்து அசத்தியது. இந்த ஆட்டம் முடிய போகும் கடைசி நிமிடத்தில் ஒடிசா வீரர் மீண்டும் ஒரு கோல் அடித்தார். இதன் விளைவால், 4-2 என்ற கோல் கணக்கில், மும்பை அணியானது ஒடிசா அணியை வீழ்த்தியது. இந்த வெற்றி மூலம், மும்பை அணி, 30 புள்ளிகளுடன் முதலிடத்தை எட்டி உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here