தோல்வி பக்கமே திரும்பாத மும்பை அணி…, இந்தியன் சூப்பர் லீக்கில் எதிரணியை மிரள வைத்து அசத்தல்!!

0
தோல்வி பக்கமே திரும்பாத மும்பை அணி..., இந்தியன் சூப்பர் லீக்கில் எதிரணியை மிரள வைத்து அசத்தல்!!
தோல்வி பக்கமே திரும்பாத மும்பை அணி..., இந்தியன் சூப்பர் லீக்கில் எதிரணியை மிரள வைத்து அசத்தல்!!

இந்தியன் சூப்பர் லீக் தொடரில், நார்த் ஈஸ்ட் யுனைடெட் அணியை ஒரு கோல் கூட போட விடாமல், பலம் வாய்ந்த மும்பை சிட்டி அணி, தொடர் கோல் மழை பொழிந்து அசத்தலான வெற்றி பெற்றது.

இந்தியன் சூப்பர் லீக்:

இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து தொடரின் 9 வது சீசன் 11 அணிகளுக்கு இடையே நடைபெற்று வருகிறது. இந்த தொடரில், நேற்று பலம் வாய்ந்த மும்பை சிட்டி அணியானது, நார்த் ஈஸ்ட் யுனைடெட் அணியை எதிர்த்து போட்டியிட்டது. இதில், மும்பை சிட்டி அணியின் அகமது ஜாஹூ 5வது நிமிடத்திலேயே அடித்து அசத்தினார்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

இதனை தொடர்ந்து, முழு ஆதிக்கத்தையும் செலுத்த தொடங்கிய, மும்பை சிட்டி அணியில், ஜார்ஜ் பெரேரா தியாஸ், கிரெக் ஸ்டீவர்ட் மற்றும் வினித் ராய் ஆகியோர், 11வது, 15 வது மற்றும் 45 வது நிமிடங்களில் அடுத்தடுத்து கோல் அடித்தனர். இதனால், மும்பை சிட்டி அணியானது, ஆட்டத்தின் முதல் பாதியிலேயே 4-0 என்ற கோல் கணக்கில் அசைக்க முடியாத முன்னிலை பெற்றனர்.

வேல்ஸ் அணியை வீழ்த்திய இந்தியா…, காலிறுதிக்கு தகுதி பெற்றதா? முழு விவரம் உள்ளே!!

இதையடுத்து தொடங்கப்பட்ட, 2வது பாதியில், எதிரணியை கோல் போட விடாமல், மும்பை சிட்டி அணி தடுத்து மட்டுமே வந்தது. இதனால், ஆட்ட நேர முடிவில் மும்பை சிட்டி அணியானது 4-0 என்ற கோல் கணக்கில் அபாரமாக வெற்றி பெற்று, இந்த தொடரில் தோல்வியே சந்திக்காத அணியாக வலம் வருகிறது. இந்த வெற்றியால், மும்பை சிட்டி அணியானது 39 புள்ளிகளுடன் தொடர்ந்து முதலிடத்தை தக்க வைத்துக் கொண்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here