சொந்த மண்ணில் வெற்றி கண்ட கேரளா…, நார்த் ஈஸ்ட் யுனைடெட் அணியை வீழ்த்தி புள்ளி பட்டியலில் அபாரம்!!

0
சொந்த மண்ணில் வெற்றி கண்ட கேரளா..., நார்த் ஈஸ்ட் யுனைடெட் அணியை வீழ்த்தி புள்ளி பட்டியலில் அபாரம்!!
சொந்த மண்ணில் வெற்றி கண்ட கேரளா..., நார்த் ஈஸ்ட் யுனைடெட் அணியை வீழ்த்தி புள்ளி பட்டியலில் அபாரம்!!

இந்தியன் சூப்பர் லீக் தொடரில், 2 கோல் வித்தியாசத்தில் நார்த் ஈஸ்ட் யுனைடெட் அணியை, கேரளா பிளாஸ்டர்ஸ் அணி வீழ்த்தி புள்ளிப் பட்டியலில் முன்னேறி உள்ளது.

இந்தியன் சூப்பர் லீக்:

இந்தியன் சூப்பர் லீக் தொடரின் 9 வது சீசன் பல்வேறு நகரங்களில், விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் நார்த்ஈஸ்ட் யுனைடெட் அணியை எதிர்த்து, கேரளா பிளாஸ்டர்ஸ் அணி நேற்று தனது சொந்த மண்ணில் மோதியது. இதில், புள்ளிப் பட்டியலில் கடைசி இடத்தில் இருக்கும் நார்த்ஈஸ்ட் யுனைடெட் அணி, போட்டியின் தொடக்கத்தில் இருந்தே கோலுக்காக போராடியது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

இந்த போட்டியில் கேரளா அணியின், டிமிட்ரியோஸ் டயமண்டகோஸ் 42 வது மற்றும் 44 வது நிமிடங்களில் இரண்டு கோல்கள் அடித்து, அசத்தினார். இதனால், கேரள அணி ஆட்டத்தின் முதல் பாதியில் 2-0 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்று இருந்தது. இதையடுத்து தொடங்கப்பட்ட, 2வது பாதியில் இரு அணி வீரர்களும் கோல் அடிக்காத நிலையில், கேரளா பிளாஸ்டர்ஸ் அணி 2 கோல் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

வரலாற்று சாதனை படைத்த இந்திய இளம் படை…, U19 T20 உலக கோப்பையை தட்டி தூக்கி அசத்தல்!!

இந்த வெற்றி மூலம், கேரளா பிளாஸ்டர்ஸ் அணி இதுவரை விளையாடிய 15 போட்டிகளில் 9ல் வெற்றி 1ல் டிரா மற்றும் 5ல் தோல்வியடைந்து 28 புள்ளிகளுடன் 3வது இடத்தை பிடித்துள்ளது. 11 அணிகள் கொண்ட இந்த புள்ளிப் பட்டியலில் சென்னை அணியானது 17 புள்ளிகளுடன் 8 வது இடத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here