எதிரணியை பந்தாடிய கேரளா…, சொந்த மண்ணில் கெத்து காட்டி அசத்தல்!!

0
எதிரணியை பந்தாடிய கேரளா..., சொந்த மண்ணில் கெத்து காட்டி அசத்தல்!!
எதிரணியை பந்தாடிய கேரளா..., சொந்த மண்ணில் கெத்து காட்டி அசத்தல்!!

இந்தியன் சூப்பர் லீக் தொடரில் ஜாம்ஷெட்பூர் அணியை கேரளா அணி தனது சொந்த மண்ணில் வீழ்த்தியது.

இந்தியன் சூப்பர் லீக்:

இந்தியன் சூப்பர் லீக் தொடர், 11 அணிகளுக்கு இடையே கொல்கத்தா, மும்பை, கேரளா உள்ளிட்ட நகரங்களில் நடைபெற்று வருகிறது. இந்த வகையில், நேற்று கேரளாவில் நடைபெற்ற போட்டியில், ஜாம்ஷெட்பூர் அணிக்கு எதிராக கேரளா அணி மோதியது. இதில், சொந்த மண்ணில் விளையாடிய கேரளா அணி ஆரம்ப முதலே அதிரடி காட்டியது.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

இதனால், போட்டியின் 9 வது நிமிடத்திலேயே அப்போஸ்தலோஸ் கேரளா சார்பாக கோல் ஒன்றை அடித்து அசத்தினார். இவரை தொடர்ந்து, ஜாம்ஷெட்பூர் அணியின், டேனியல் 17 வது நிமிடத்தில் கோல் ஒன்றை அடித்து பதிலடி கொடுத்தார். இதன் பிறகு, கேரளா அணிக்கு கிடைத்த பெனால்டி ஷாட்டை, டிமிட்ரியோஸ் டயமண்டகோஸ் கோலாக மாற்றினார்.

அறிமுக போட்டியிலேயே அசத்திய இளம் வீரர்…, நம்பிக்கை வீண் போகவில்லை…, ஹர்திக் பாண்டியா ஓபன் டாக்!!

இதன் மூலம், ஆட்டத்தின் முதல் பாதியில், கேரளா அணி 2-1 என முன்னிலை பெற்று இருந்தது. இதையடுத்து தொடங்கப்பட்ட 2வது பாதியில், கேரளா வீரர் ஒரு கோல் அடிக்க, 3-1 என்ற கணக்கில் ஜாம்ஷெட்பூர் அணியை கேரளா அணி வீழ்த்தியது. இந்த வெற்றி மூலம், புள்ளிப் பட்டியலில் கேரளா அணி 25 புள்ளிகளுடன் 3வது இடத்தை பிடித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here