பெங்களூரு அணியை வீழ்த்திய ஈஸ்ட் பெங்கால்…, ஒரே வீரர் 2 கோல்கள் அடித்து அசத்தல்!!

0
பெங்களூரு அணியை வீழ்த்திய ஈஸ்ட் பெங்கால்..., ஒரே வீரர் 2 கோல்கள் அடித்து அசத்தல்!!
பெங்களூரு அணியை வீழ்த்திய ஈஸ்ட் பெங்கால்..., ஒரே வீரர் 2 கோல்கள் அடித்து அசத்தல்!!

இந்தியன் சூப்பர் லீக் தொடரில், பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியை ஈஸ்ட் பெங்கால் அணி வென்று அசத்தி உள்ளது.

இந்தியன் சூப்பர் லீக்:

இந்தியன் சூப்பர் லீக் தொடரில், நேற்று பெங்களூரு அணியை எதிர்த்து ஈஸ்ட் பெங்கால் அணி மோதியது. இந்த போட்டியின் முதல் 35 நிமிடங்கள் வரை இரு அணிகளும் ஒரு கோலுக்காக கடுமையாக போராடினர். முதல் ஆட்ட நேரம் முடிவதற்கு முன்பாக, பெங்களூரு அணி செய்த சிறு தவறினால், ஈஸ்ட் பெங்கால் அணிக்கு பெனால்டி வாய்ப்புக்கு கிடைத்தது.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

இந்த பெனால்டி வாய்ப்பை ஈஸ்ட் பெங்கால் அணியின் கிளீடன் சில்வா சரியாக பயன்படுத்தி கோலாக மாற்றி அசத்தினார். இதனால், முதல் பாதியில் 1-0 என ஈஸ்ட் பெங்கால் அணி முன்னிலை பெற்றது. இதையடுத்து தொடங்கப்பட்ட 2வது பாதியின் 55வது நிமிடத்தில், பெங்களூரு அணியின் ஜாவி ஹெர்னாண்டஸ் கோல் ஒன்றை அடித்தார்.

இதன் பின் 90+2 வது நிமிடத்தில், பெனால்டி வாய்ப்பை கோலாக மாற்றிய ஈஸ்ட் பெங்காலின் கிளீடன் சில்வா ஒரு கோல் அடித்து பதிலடி கொடுத்தார். இதனால், ஈஸ்ட் பெங்கால் அணியானது, 2-1 என்ற கோல் கணக்கில் பெங்களூரு அணியை வீழ்த்தியது. இந்த போட்டியின் முடிவில், ஈஸ்ட் பெங்கால் அணி (12), பெங்களூரு அணி (10) புள்ளிகளுடன் 8 வது மற்றும் 9வது இடத்தில் உள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here