ISL 2022: தொடர்ந்து நம்பர் 1 இடத்தை தக்கவைத்த நடப்பு சாம்பியன்…, மற்ற அணிகளின் நிலை??

0
ISL 2022: தொடர்ந்து நம்பர் 1 இடத்தை தக்கவைத்த நடப்பு சாம்பியன்..., மற்ற அணிகளின் நிலை??
ISL 2022: தொடர்ந்து நம்பர் 1 இடத்தை தக்கவைத்த நடப்பு சாம்பியன்..., மற்ற அணிகளின் நிலை??

இந்தியன் சூப்பர் லீக் தொடரில், ஜாம்ஷெட்பூர் அணியை எதிர்த்து விளையாடி தற்போது நம்பர் 1 அணியாக உள்ள ஹைதராபாத் அணி ஒரு கோல் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்தியன் சூப்பர் லீக்:

இந்தியன் சூப்பர் லீக் தொடரில் ஜாம்ஷெட்பூர் அணியானது தனது சொந்த மண்ணில் புள்ளி பட்டியலில் முதலிடத்தில் இருக்கும் நடப்பு சாம்பியன் ஹைதராபாத் அணிக்கு எதிராக போட்டியிட்டது. இந்த போட்டியில், இரு அணிகளும் ஒரு கோலுக்காக கடுமையாக போராடி வந்தனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

ஆனாலும், ஆட்டத்தின் முதல் பாதி வரையிலும் இரு அணிகளும் ஒரு கோல் கூட அடிக்கவில்லை. இதையடுத்து தொடங்கிய ஆட்டத்தின் இரண்டாவது பாதியில் எழுச்சி கண்ட ஹைதராபாத் அணி 48 வது நிமிடத்தில் கோல் ஒன்றை அடித்து முன்னிலை பெற்றது. இதன் பிறகு, ஜாம்ஷெட்பூர் அணி கோல் அடிக்க முயற்சித்தாலும், அதனை தடுத்து ஹைதராபாத் அணி 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.

புரோ கபடி லீக்: ஒரு புள்ளி வித்தியாசத்தில் தலைகீழாக மாறிய வெற்றி…, தரவரிசையில் ஏற்பட்ட பகீர் மாற்றம்??

இந்த வெற்றி மூலம், ஹைதராபாத் அணி 6 போட்டியில் விளையாடி 5 ல் வெற்றி 1ல் டிரா செய்து 16 புள்ளிகளை பெற்று தொடர்ந்து முதலிடத்தை தக்க வைத்துக் கொண்டது. 11 அணிகள் கொண்ட இந்த புள்ளி பட்டியலில், சென்னையின் FC அணி 4 போட்டிகளில் 2ல் வெற்றி, தலா ஒரு போட்டியில் தோல்வி மற்றும் டிரா செய்து 7 புள்ளிகளுடன் 6 வது இடத்தில் உள்ளது. இந்த லீக்கில் இன்று ஏடிகே மோகன் பகான் அணியை எதிர்த்து நார்த் ஈஸ்ட் யுனைடெட் அணி மோத உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here