இந்தியன் சூப்பர் லீக்: கோலின்றி சமனில் முடிந்த அரையிறுதி ஆட்டம்…, இறுதிப் போட்டிக்கு முன்னேற போவது யார்??

0
இந்தியன் சூப்பர் லீக்: கோலின்றி சமனில் முடிந்த அரையிறுதி ஆட்டம்..., இறுதிப் போட்டிக்கு முன்னேற போவது யார்??
இந்தியன் சூப்பர் லீக்: கோலின்றி சமனில் முடிந்த அரையிறுதி ஆட்டம்..., இறுதிப் போட்டிக்கு முன்னேற போவது யார்??

இந்தியன் சூப்பர் லீக் தொடரில், ஹைதராபாத் மற்றும் ஏடிகே மோகன் பகான் அணிகளுக்கு இடையிலான அரையிறுதி போட்டி கோலின்றி முடிந்தது.

இந்தியன் சூப்பர் லீக்:

இந்தியாவின் பல்வேறு நகரங்களை மையமாக கொண்டு, இந்தியன் சூப்பர் லீக் தொடர் 11 அணிகளுக்கு இடையே நடைபெற்று வந்தது. இதில், மும்பை சிட்டி, ஹைதராபாத், ஏடிகே மோகன் பகான் மற்றும் பெங்களூரு ஆகிய 4 அணிகள் அரையிறுதி சுற்றுக்கு முன்னேறி உள்ளன. கடந்த மார்ச் 7ம் தேதி முதல் இந்த அரையிறுதிப் போட்டிகள், இரு பிரிவுகளாக நடைபெற்று வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

இதன் முதல் அரையிறுதி போட்டியில், பெங்களூரு அணி மும்பை சிட்டி அணியை ஒரு கோல் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இதனை தொடர்ந்து, நேற்று 2 போட்டியில், ஹைதராபாத் அணியை எதிர்த்து, ஏடிகே மோகன் பகான் அணி மோதியது. இரு பலம் வாய்ந்த அணிகளுக்கு இடையே நடைபெற்ற இந்த போட்டியில், முதல் பாதியில் ஒரு கோல் கூட அடிக்காத நிலையில் இருந்தது.

நடிப்பு தாரகையை தாரை வார்த்த சன் டிவி.., கமிட் செய்த பகுமானத்தில் கனவுக் கோட்டை கட்டி வரும் ஜீ தமிழ்!!

இதையடுத்து தொடங்கப்பட்ட 2வது பாதியிலும், ஒரு கோலுக்காக இரு அணிகள் கடுமையாக போராடினர். ஆட்டத்தின் இறுதி வரையிலும், யாரும் கோல் அடிக்காததால், கோலின்றி அரையிறுதி ஆட்டம் முடிவடைந்தது. இதனை தொடர்ந்து, அரையிறுதியின் 2 வது லீக் போட்டிகள் மார்ச் 12 மற்றும் 13 தேதிகளில் நடைபெற இருக்கிறது. இந்த போட்டிகளின் முடிவில், வெற்றி பெறும் அணிகள் இறுதிப் போட்டியில் மார்ச் 18 தேதி மோத உள்ளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here