இந்தியன் சூப்பர் லீக் 2023: நாக் அவுட், இறுதிப் போட்டி உள்ளிட்ட full schedule வெளியிடு!!

0
இந்தியன் சூப்பர் லீக் 2023: நாக் அவுட், இறுதிப் போட்டி உள்ளிட்ட full schedule வெளியிடு!!

இந்தியன் சூப்பர் லீக் தொடருக்கான நாக் அவுட், அரையிறுதி மற்றும் இறுதிப் போட்டிகள் ஆகிய போட்டிக்கான தேதிகள் வெளியாகி உள்ளன.

இந்தியன் சூப்பர் லீக்:

இந்தியன் சூப்பர் லீக் தொடரின் 9 வது சீசன் கடந்த அக்டோபர் மாதம் முதல், சென்னை, மும்பை, கேரளா, கொல்கத்தா உள்ளிட்ட இடங்களை மையமாக கொண்டு 11 அணிகளுக்கு இடையே நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் லீக் சுற்றுகள் வரும் 26ம் தேதியுடன் முடிவடைய உள்ளது.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

இந்நிலையில், இந்த தொடருக்கான நாக் அவுட், அரையிறுதி மற்றும் இறுதிப் போட்டிகள் நடைபெறும் தேதி குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அதாவது, இந்த தொடரின் நாக் அவுட் சுற்றுகள் மார்ச் 3 மற்றும் 4ம் தேதி நடைபெற இருக்கிறது. இதனை தொடர்ந்து, அரையிறுதிப் போட்டிகள், 4 பிரிவுகளாக நடத்தப்பட உள்ளது.

இந்திய அணிக்கு சவால் விடும் ஒரே வீரர் இவர் தான்…, பவுலர்கள் சமாளிப்பார்களா?

இந்த போட்டிகள் முறை மார்ச் 7, 9, 12 மற்றும் 13 ஆகிய தேதிகளில் நடைபெற இருக்கிறது. இதன் முடிவில் வெற்றி பெரும் 2 அணிகள் இறுதி சுற்றுக்கு முன்னேறும். இந்த இறுதி போட்டியானது, வரும் 18ம் தேதி நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதுவரை இந்த லீக் தொடரில், அனைத்து அணிகளும் 16 முதல் 17 போட்டிகளில் விளையாடி உள்ள நிலையில், மும்பை மற்றும் ஹைதராபாத் அணி முதல் இரண்டு இடங்களைப் பிடித்துள்ளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here