ஆயில் மேக்கப் … அலட்டி கொள்ளாத போஸ்…! செம ஸ்டைலாக ஐஸ்வர்யா ராஜேஷ் !!!

0

சன் டிவியில் ஒரு நிகழ்ச்சி தொகுப்பாளினியாக சின்னத்திரையில் அறிமுகம் ஆனவர் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ். அதன் பின் மெல்ல மெல்ல படங்களில் நடித்து பிரபலம் ஆனார். இந்நிலையில் தற்போது அவரின் காட்டின் நடுவே ஒரு போட்டோ ஷூட் நடத்தி உள்ளார். அதில் ஆயில் மேக்கப் உடன் மிகவும்  வித்தியாசமான உடையில்  உள்ளார்.

அசத்தப்போவது யாரு என்ற சன் டிவியில் ஒளிபரப்பான தொகுப்பிலினியாக அறிமுகம் ஆகி பின் ஒரு கதாநாயகியாக அளவுக்கு உயர்ந்தவர் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ். நீதானா அவன் என்ற படத்தின்  மூலம் நாயகியாக திரைக்கு அறிமுகம் ஆனவர். அதன் பின் பல படங்களில் நடித்துள்ளார். இருப்பினும் அவரின் காக்கா முட்டை படம்  தான் அவரின் திரை வாழ்க்கையை திருப்பி போட்டது என்றே சொல்லலாம். எதார்த்த நடிப்புக்கு பெயர் போனவர் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ். இதை தொடர்ந்து இவர் மலையாளம், தெலுங்கு போன்ற மொழி படங்களிலும் கவனம் செலுத்தி வருகிறார்.

தற்போது சோசியல் மீடியாவில் மிகவும் ஆக்டிவாக இருக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் அவ்வப்போது வெளியிடும் புகைப்படங்கள் அவரின் ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்து வருகிறது. அந்த வகையில் தற்போது அவர் ஒரு புகைப்படத்தை வெளியிட்டு உள்ளார். அதில் நடு காட்டில் மிகவும் வித்தியாசமான சிவப்பு மற்றும் வெள்ளை நிறம் கலந்த உடையில் ஆயில் மேப்பில் பறவை சிறகை விரித்தது போன்ற போஸ் கொடுத்து  உள்ளார். இந்த புகைப்படம் தற்போது வைரல் ஆகிவருகிறது.

 

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here