ஜெயிலர் திரைப்படத்தை தொடர்ந்து தமிழ் சினிமா ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்து வரும் திரைப்படம் லோகேஷ் கனகராஜின் ‘லியோ’. ஆக்ஷன், அதிரடி, ரொமான்ஸ் என அனைத்து அம்சங்களுடன் தயாரிக்கப்பட்டுள்ள இந்த திரைப்படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் என்று படக்குழு தெரிவித்துள்ளது.
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இந்த நிலையில், ‘லியோ’ திரைப்படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ள இயக்குனர் மிஸ்கின் லியோ திரைப்படம் குறித்து பேசுகையில், ‘படம் ரொம்ப நல்லா வந்துருக்குணு கேள்விப்பட்டேன். விஜய் தம்பிக்கு படம் ரொம்ப பிடிச்சிருக்கு. செப்டம்பர் 30 ஆம் தேதி சந்திக்கலாம்’ என்று அப்டேட் கொடுத்துள்ளார். அதனால், ஒருவேளை செப்டம்பர் 30 ஆம் தேதி லியோ இசை வெளியீட்டு விழா இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்பட்டுள்ளது.