
இந்தியாவில் பொருளாதாரத்தில் நலிவடைந்த மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை மத்திய மாநில அரசுகள் வழங்கி வருகிறது. இதில் கல்வி நிறுவனம் மற்றும் வேலைவாய்ப்புகளில் வழங்கப்படும் இட ஒதுக்கீடு சலுகை மகத்தான ஒன்றாக உள்ளது. ஆனால் இந்த சலுகையை தகுதியற்ற சிலர் போலி சான்றிதழ் மூலம் அனுபவித்து வருவதாக கண்டறியப்பட்டு வருகிறது. இப்படி கோவையை சேர்ந்த பாலசுந்தரம் என்பவர் 1982ம் ஆண்டு பழங்குடியினத்தை சேர்ந்தவராக போலி சாதி சான்றிதழ் தயார் செய்து வன மரபியல் துறையில் அலுவலராக நியமிக்கப்பட்டார்.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
இவர் கடந்த 1999ம் ஆண்டு இளநிலை எழுத்தராக பதவி உயர்வு பெற்ற போது இவரது சாதி சான்றிதழ் மாநில ஆய்வுக் குழுவின் மூலம் ஆய்வுக்குட்படுத்த பட்டது. அப்போது இவரின் சகோதரரும், சகோதரியும் வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என கண்டறிய பட்டது. எனவே போலி சான்றிதழ் மூலம் அரசு வேலையில் சேர்ந்தது உறுதி செய்யப்பட்டது. இதனால் கடந்த 2022ம் ஆண்டு ஜனவரி மாதம் பாலசுந்தரத்தின் பழங்குடியினர் சாதி சான்றிதழை ரத்து செய்ததுடன் இவரின் ஓய்வு கால பலன்களும் நிறுத்தப்பட்டது.
இதையடுத்து 40 ஆண்டுகளுக்கு பிறகு ரத்து செய்வது சட்டபூர்வமானதல்ல என பாலசுந்தரம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதை விசாரித்த நீதிபதிகள், “அரசின் இட ஒதுக்கீடு சலுகையை துஷ்பிரயோகம் செய்தவர்களை தண்டிக்காமல் விடக்கூடாது. போலி சான்றிதழை கண்டறிய கால தாமதமானதால் மனுதாரரின் கோரிக்கையை நியாயப்படுத்த முடியாது. எனவே இந்த வழக்கு தள்ளுபடி செய்யப்படுகிறது.” என அதிரடி உத்தரவை பிறப்பித்தார்.