நடிகர் பார்த்திபன் உழைப்பிற்கு கிடைத்த வெகுமதி.., ரசிகர்கள் வாழ்த்துமழை!!

0
நடிகர் பார்த்திபன் உழைப்பிற்கு கிடைத்த வெகுமதி.., ரசிகர்கள் வாழ்த்துமழை!!

ஆஸ்கார் விருதுகள் பெற்ற இந்திய திரைப்படங்களின் லிஸ்டில் வெளியாகியுள்ள நிலையில் அது குறித்த முழு விபரமும் இணையத்தில் கசிந்துள்ளது.

ஆஸ்கார் விருது:

தமிழ் சினிமாவில் சிறந்த நடிகராக மட்டுமின்றி இயக்குநராகவும் வெற்றி கண்டவர் தான் பார்த்திபன். புதுமை விரும்பியான இவர் தான் எடுக்கும் படங்கள் மூலம் புது புது முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில் இவர் இயக்கி நடித்த நடித்த ஒத்த செருப்பு சைஸ் 7 என்ற திரைப்படம் கடந்த 2019 ஆம் ஆண்டு வெளியாகி சினிமா ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

அதேபோல் சமீபத்தில் வெளியான இரவின் நிழல் திரைப்படம் ஒரே ஷாட்டில் படமாக்கப்பட்டு சாதனை படைத்தார். இந்நிலையில் இந்த திரைப்படம் ஆஸ்கார் விருதில் இடம் பெற்றுள்ளது. அதாவது இந்த வருட ஆஸ்கர் விருது பட்டியலில் கிட்டத்தட்ட 13 இந்திய படங்கள் இடம் பெற்றுள்ளன. அதாவது ஹிந்தியில் 6 , தமிழில் 1, தெலுங்கில் 2, மலையாளத்தில் 1, பெங்காலியில் 1, குஜராத்தியில் 1, அசாம் 1 ஆகிய மொழிகளில் படங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

அதிதியை வம்பிழுத்த பிரபலத்துக்கு நேர்ந்த பரிதாபம் – 25 வருஷமா பிரச்சனையில் சிக்கி சீரழியும் சோகம்!!

அதில் சிறந்த படமாக குஜராத்தி மொழியில் செல்லோ ஷோ தேர்வு செய்யப்பட்டு ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டது. இந்த பட்டியலில் உள்ள தமிழ் படமான பார்த்திபன் இயக்கிய இரவின் நிழல் தேர்வாகி இருக்கிறது. இதற்கு முன்னர் அவர் எடுத்த ஒத்த செருப்பு திரைப்படம் ஆஸ்கர் விருது பட்டியலில் இடம் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here