IPL 2022 வில் புதிய லக்னோ அணிக்கு கேப்டனாகும் கே.எல் ராகுல் – அவருக்கு சம்பளம் எவ்வளவு தெரியுமா??

0
CSK வின் முக்கிய வீரரை ஸ்கெட்ச் போட்டு தூக்கிய RCB அணி - ஐபிஎல் ஏலத்தில் நடந்த சுவாரஸ்யம்!!
CSK வின் முக்கிய வீரரை ஸ்கெட்ச் போட்டு தூக்கிய RCB அணி - ஐபிஎல் ஏலத்தில் நடந்த சுவாரஸ்யம்!!

இந்த ஆண்டு, ஐபிஎல் போட்டியில் புதிதாக இரண்டு அணிகள் சேர்க்கப்பட்டுள்ள நிலையில், இந்த இரு அணிகளும் தேர்வு செய்துள்ள வீரர்களின் பட்டியல் தற்போது வெளியாகியுள்ளது.

பட்டியல் வெளியீடு:

ஐபிஎல் போட்டியில் இந்த வருடம் முதல், லக்னோ மற்றும் அகமதாபாத் ஆகிய நகரங்களை அடிப்படையாகக் கொண்டு 2 புதிய அணிகள் உருவாக்கப்பட்டுள்ளன. இதில் லக்னோ அணியை கொல்கத்தாவை சேர்ந்த ஆர்.பி.எஸ்.ஜி குழுமம் 7,090 கோடி ரூபாய்க்கு வாங்கியுள்ளது. அதேபோல், அகமதாபாத் அணியை சிபிசி கேப்பிட்டல் நிறுவனம் 5,600 கோடி ரூபாய்க்கு சொந்தமாக்கி உள்ளது. இதன்படி, ஐபிஎல் 2022 போட்டியின் வீரர்களுக்கான ஏலம் பிப்ரவரி 12 மற்றும் 13 தேதிகளில் நடைபெறும் என கூறப்படுகிறது.

அந்த வகையில் தற்போது, இந்த புதிய இரு அணிகளுக்கான அதிகாரப்பூர்வ வீரர் தேர்வு பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி, அகமதாபாத் அணியில் ஹர்திக் பாண்ட்யா, ரஷித்கான், சுப்மான் கில் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இதே போல், லக்னோ அணியில் லோகேஷ் ராகுல், ஸ்டோனிஸ் ரவி மற்றும் ரவி பிஷ்னோய் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். இதில் லக்னோ அணி கேப்டனாக உள்ள கே.எல்.ராகுலுக்கு 17 கோடி சம்பளம் பேசப்பட்டுள்ளது.

இதன் மூலம் ஐபிஎல் வரலாற்றில் அதிக சம்பளம் பெறும் வீரர்களில், ராகுலும் இணைந்துள்ளார். அதேபோல், அகமதாபாத் அணி ஹர்திக் பாண்டியா மற்றும் ரஷித் கானுக்கு 15 கோடி சம்பளம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய இரு அணிகள் குறித்த பட்டியல், ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here