ஐபிஎல் டி 20 காலவரையின்றி ஒத்திவைப்பு – பிசிசிஐ டெல்லி உயர்நீதிமன்றத்தில் தகவல்!!

0

கொரோனா இரண்டாவது அலைவீச்சு காரணமாக 2021அம் ஆண்டு ஐ. பி.எல்.தொடர் காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டதாக பிசிசிஐ டெல்லி உயர்நீதிமன்றத்தில் தகவல் தெரிவித்தனர்.

ஐபிஎல் தொடர் ஒத்திவைப்பு

இந்தியாவில் கொரோனாவின் இரண்டாவது அலை தாக்கம் மிகவேகமாக பரவி வருகிறது. இதன் மத்தியில் ஐபிஎல் டி20 தொடர் விறுவிறுப்பாக நடந்து கொண்டிருந்தது. தற்போது அணி வீரர்களுக்கு அடுத்தடுத்து கொரோனா தொற்று உறுதிப்படுத்த பட்டதால் பிசிசிஐ ஐபிஎல் தொடரை காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டதாக அறிவித்துள்ளார். இந்த தகவலை பிசிசிஐ டெல்லி உயர்நீதிமன்றதிடம் தெரிவித்துள்ளது.

ஐ. பி.எல்.தொடரில் இன்றய ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன் ரைசஸ் ஹைதெராபாத் மோத இருந்தனர். இந்நிலையில் கொல்கத்தா அணி வீரர்களான வருண் சக்கரவர்த்தி, சந்திப்பு வாரியார், ஹைதெராபாத் அணியை சேர்ந்த விர்த்திமான் சஹா, டெல்லி அணியை சேர்த்த அமித் மிஸ்ராவுக்கும் கொரோனா தோற்று உறுதி செய்யப்பட்டது.

மூன்றாவது முறையாக மம்தா முதல்வராக இன்று பதவி ஏற்பு – குவியும் வாழ்த்துக்கள்!!

அடுத்து அடுத்து கிரிக்கெட் வீரர்களுக்கு கொரோனா தோற்று உறுதி செய்யப்பட்டதால் பிசிசிஐ மே 30 ஆம் தேதி வரை நடக்கவிருந்த ஐபிஎல் தொடரை காலவரையின்றி ஒத்திவைக்கபட்டது. இதனால் இளைஞர்களும், கிரிக்கெட் ரசிகர்களும் வருத்தம் தெரிவித்துள்ளார். ஐ.பி.எல் போட்டியின் புதிய தேடி பிசிசிஐ விரைவில் வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here