பிளே ஆப்புக்கு முன்னேற தவறினாலும் இதில் எப்போது RCB தான் நம்பர் 1…, விராட் கோலி படைத்த அரிய சாதனை இதோ!!

0
பிளே ஆப்புக்கு முன்னேற தவறினாலும் இதில் எப்போது RCB தான் நம்பர் 1..., விராட் கோலி படைத்த அரிய சாதனை இதோ!!
பிளே ஆப்புக்கு முன்னேற தவறினாலும் இதில் எப்போது RCB தான் நம்பர் 1..., விராட் கோலி படைத்த அரிய சாதனை இதோ!!

ஐபிஎல் தொடரின் 16 வது சீசன் கடந்த மார்ச் மாத இறுதியில் இருந்து தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 10 அணிகள் பங்கு பெற்றுள்ள இந்த தொடரில், லீக் சுற்றுகள் அனைத்தும் நேற்றுடன் முடிவடைந்தன. இதில், குஜராத் (GT), சென்னை (CSK) மற்றும் லக்னோ (LSG) ஆகிய 3 அணிகள் நேரடியாக பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறினர். மீதமுள்ள ஒரு இடத்தைப் பிடிப்பதற்கான போட்டியில், பெங்களூரு (RCB) மற்றும் மும்பை (MI) அணிகள் இருந்தன.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

இதில், மும்பை இந்தியன்ஸ் அணியானது ஹைதராபாத் அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி பிளே ஆப் வாய்ப்பை தக்க வைத்தது. ஆனால், RCB அணியோ தனது கடைசி லீக் போட்டியில் குஜராத் (GT) அணியிடம் 6 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி அடைந்ததால் பிளே ஆப் வாய்ப்பை இழந்தது. இதன் காரணமாக, மும்பை இந்தியன்ஸ் அணி புள்ளி பட்டியலில் 4 வது இடத்தை பிடித்து பிளே ஆப் சுற்றுக்குள் நுழைந்தது.

8 விக்கெட் வித்தியாசத்தில் மும்பை அணி அபார வெற்றி…, பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றதா?? முழு விவரம் உள்ளே!!

RCB அணி தனது கடைசி லீக் போட்டியில் தோல்வியை தழுவினாலும், அணியின் நட்சத்திர வீரரான விராட் கோலி 61 பந்துகளில் 13 பவுண்டரி ஒரு சிக்ஸர் உட்பட (101*) சதம் அடித்து அசத்தினார். இதன் மூலம், ஐபிஎல் அரங்கில் அதிக சதங்களை அடித்த கிறிஸ் கெய்லின் (6 சதங்கள்) சாதனையை முறியடித்து முதலிடம் பெற்றார். அதாவது, விராட் கோலி இதுவரை ஐபிஎல் அரங்கில் 7 சதங்களை அடித்துள்ளார். இந்த தொடரில், RCB அணி பிளே ஆப் சுற்றுக்கு முன்னேற தவறினாலும், அதிக ரசிகர்களை கொண்ட அணியாக திகழ்கிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here