ஐபிஎல்லின் வரலாற்றில் சரித்திரம் படைத்த CSK…, சும்மா சிங்கம் போல் ராஜாவாக மாறிய தல தோனி!!

0
ஐபிஎல்லின் வரலாற்றில் சரித்திரம் படைத்த CSK..., சும்மா சிங்கம் போல் ராஜாவாக மாறிய தல தோனி!!
ஐபிஎல்லின் வரலாற்றில் சரித்திரம் படைத்த CSK..., சும்மா சிங்கம் போல் ராஜாவாக மாறிய தல தோனி!!

இந்தியாவில் ஐபிஎல் தொடரானது கடந்த 2008 ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. இந்த தொடரானது, ரசிகர்களின் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றதன் மூலம் தற்போது வெற்றிகரமாக 16 வது சீசனில் அடியெடுத்து வைத்து விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில், தல தோனியின் சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணியானது, 2 சீசன்களை மட்டும் விளையாட முடியாத நிலைக்கு தள்ளப்பட்டது.

இருப்பினும், CSK அணி பங்கு பெற்ற அனைத்து சீசன்களிலும் பல சாதனை முத்திரைகளை படைத்துள்ளது. அதாவது, இதுவரை 14 சீசன்களில் விளையாடி உள்ள CSK அணியானது, 12 முறை பிளே ஆப் சுற்றுக்கு சென்றுள்ளது. இதில், தலா ஒரு முறை 4 மற்றும் 3 வது இடத்தை பிடித்தததுடன், 9 முறை இறுதிப்போட்டிக்கு முன்னேறி உள்ளது. இந்த இறுதிப் போட்டியில் 4 முறை வெற்றி பெற்று சாம்பியன்ஸ் பட்டத்தையும் வென்று சரித்திரம் படைத்துள்ளது.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

ஐபிஎல்லில் பங்குபெற்றுள்ள உள்ள மற்ற எந்த ஒரு அணியும் ஒட்டுமொத்த சீசன்களில் 10 முறைக்கு மேல் பிளே ஆப் சுற்றுக்குள் நுழைந்தது இல்லை. இதனால், CSK அணியானது ஆசிய அளவில் மிகவும் பிரபலமான அணியாக வலம் வருகிறது. இந்த அளவிற்கு CSK பிரபலமாவதற்கு தோனியின் பங்கு இன்றியமையாத ஒன்றாக திகழ்கிறது. இதற்கிடையில், தோனி இந்த சீசனுடன் ஓய்வு பெறுவார் என்ற தகவல்கள் வெளியாகி வரும் நிலையில், அவர் இன்னும் 5 வருடங்கள் விளையாடுவார் என CSK யின் முக்கிய நட்சத்திரமாக திகழும் ருதுராஜ் தோனியை குறித்து தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here