ஐபிஎல் 2023: பிரபல அணிக்கு புதிய பயிற்சியாளர் நியமனமா?? வெளியாகி தகவல்!!

0
ஐபிஎல் 2023: பிரபல அணிக்கு புதிய பயிற்சியாளர் நியமனமா?? வெளியாகி தகவல்!!
ஐபிஎல் 2023: பிரபல அணிக்கு புதிய பயிற்சியாளர் நியமனமா?? வெளியாகி தகவல்!!

ஐபிஎல் லீக்கின் 16 வது சீசனுக்காக அனைத்து அணிகளும், தங்கள் அணியை மேம்படுத்த பல மாற்றங்களை செய்து வருகின்றனர். இந்த வகையில், பஞ்சாப் அணி, இந்திய அணியின் முன்னாள் வீரரை புதிய பேட்டிங் பயிற்சியாளராக நியமித்துள்ளது.

புது பேட்டிங் பயிற்சியாளர்:

அடுத்த வருடம் நடைபெற உள்ள ஐபிஎல் 16 வது சீசனுக்காக அனைத்து அணிகளும், தங்களது அணியை வலுவாக கட்டமைக்கும் பணியில் தீவிரமாக இறங்கி உள்ளனர். இதற்காக, முன்கூட்டியே மினி ஏலமானது அடுத்த மாதம் 23ம் தேதி நடைபெற இருக்கிறது. ஆனால், இந்த ஏலத்துக்கு முன்பாகவே, அனைத்து அணிகளும் தங்களுக்கு வேண்டிய வீரர்களை தக்க வைத்துக் கொண்டும், அணியில் பல மாற்றங்களை மேற்கொண்டும் வருகிறார்கள்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

இந்த வகையில், கடந்த 15 சீசன்களில் விளையாடிய பஞ்சாப் கிங்ஸ் லெவன் அணி 2014ம் ஆண்டு மற்றும் இறுதி போட்டி வரை முன்னேறி இருந்தது. இதனால், இந்த முறை, எப்படியாவது கோப்பையை தட்டி தூக்க வேண்டும் என்று கேப்டன், பயிற்சியாளர் உள்ளிட்ட பல மாற்றங்களை மேற்கொண்டு வருகிறது. அதாவது, கடந்த சீசனில் பஞ்சாப் அணியின் கேப்டனாக இருந்த மயங்க் அகர்வாலுக்கு பதில், இந்திய அணியின் ஒருநாள் தொடரின் கேப்டனாக திகழும் ஷிகர் தவானை அணி நிர்வாகம் சமீபத்தில் அறிவித்திருந்தது.

ஐசிசி தரவரிசையில் முதலிடத்திற்கு நிலவும் கடுமையான போட்டி…, இந்தியாவா?? இங்கிலாந்தா?? முழு விவரம் உள்ளே!!

இவரை தொடர்ந்து, இந்திய அணியின் முன்னாள் வீரர் வாசிம் ஜாஃபர் கடந்த 2019 ஆம் ஆண்டு இந்த அணியின் பேட்டிங் பயிற்சியாளராக இருந்தார். அதன் பிறகு சில காரணங்களால் அணியில் இருந்து விலகி இருந்தார். தற்போது இவரை மீண்டும் பஞ்சாப் அணி நிர்வாகம் பயிற்சியாளராக நியமித்து உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here