IPL 2023: லக்னோவை எதிர்த்து CSK இன்று பலப்பரீட்சை…, தோனி அணியை வெற்றி பாதைக்கு திருப்புவாரா??

0
IPL 2023: லக்னோவை எதிர்த்து CSK இன்று பலப்பரீட்சை..., தோனி அணியை வெற்றி பாதைக்கு திருப்புவாரா??
IPL 2023: லக்னோவை எதிர்த்து CSK இன்று பலப்பரீட்சை..., தோனி அணியை வெற்றி பாதைக்கு திருப்புவாரா??

இந்தியன் பிரீமியர் லீக் தொடரில், இன்று அடுத்தடுத்து, சாம்பியன் அணிகளுக்கு போட்டி நடைபெற இருக்கிறது.

ஐபிஎல்:

ஐபிஎல் லீக் தொடரில் இன்று, லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் (LSG) அணியானது சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணியை எதிர்த்து தனது சொந்த மண்ணில் மோத இருக்கிறது. கடந்த RCB அணிக்கு எதிரான போட்டியில், காயமடைந்த லக்னோ அணியின் கேப்டன் கே எல் ராகுல் களமிறங்குவது கேள்வி குறியாகி உள்ளது. ஒருவேளை, இவர் களமிறங்காத பட்சத்தில், க்ருனால் பாண்டியா LSG அணியை வழிநடத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்றைய போட்டிக்கான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை பொறுத்த வரையில், ராஜஸ்தான் மற்றும் பஞ்சாப் அணிகளிடம், கடைசி ஓவர் வரை சென்று தோல்வியை சந்தித்தது. இதனால், இன்றைய போட்டி மூலம் தோனி தலைமையிலான CSK அணி மீண்டும் வெற்றி பாதைக்கு திரும்ப முயற்சிக்கும். CSK அணியில், பேட்டிங் வரிசை பலமாக இருந்தாலும், பவுலிங்கில் சற்று பலவீனமாகவே உள்ளது. இதனால், இன்றைய போட்டியில், தோனி வெற்றி பெற வேண்டி தரமான பிளேயிங் லெவனை தேர்வு செய்து களமிறங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

கடைசி ஓவரில் தலைகீழாக மாறிய வெற்றி…, சாம்பியன் அணியை வீழ்த்தி டெல்லி அசத்தல்!!

இந்த போட்டியானது, இன்று பிற்பகல் 3.30 மணிக்கு லக்னோவில் நடைபெற இருக்கிறது. இதனை தொடர்ந்து, இன்று 7.30 மணிக்கு பஞ்சாப் கிங்ஸ் அணியானது மும்பை இந்தியன்ஸ் அணியை எதிர்கொள்ள இருக்கிறது. ஐபிஎல்லில் அதிக முறை சாம்பியன் பட்டம் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி, நடப்பு ஐபிஎல் முதல் சில போட்டிகளில் தோல்வியை சந்தித்தாலும், அடுத்தடுத்து வெற்றி பெற்று அசத்தி வருகிறது. இதனால், இன்றைய போட்டியிலும், வெற்றி பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here