ஐபிஎல் தொடரில் பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் நடத்தை விதியை மீறியதற்காக, கொல்கத்தா அணியின் கேப்டன் நிதிஷ் ராணாவுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
கொல்கத்தா:
இந்தியன் பிரீமியர் லீக் தொடருக்கான, லீக் போட்டிகள் அனைத்தும் வரும் மே 21ம் தேதியுடன் முடிவடைய உள்ளது. இதனை தொடர்ந்து, பிளே ஆப் சுற்றுகள் மே 23, 24 மற்றும் 26 ஆகிய தேதிகளிலும், இறுதிப் போட்டியானது வரும் மே 28ம் தேதியும் நடைபெற இருக்கிறது. தற்போது, பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறும் முனைப்பில் 10 அணிகள் கடுமையாக போட்டியிட்டு வருகின்றனர்.
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இந்த வகையில், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் ஆகிய அணிகளுக்கு இடையே போட்டி நேற்று நடைபெற்றது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 179 ரன்கள் எடுத்திருந்தனர். இதனை தொடர்ந்து, ஓவரின் கடைசி வரை போராடிய கொல்கத்தா அணி 182 ரன்கள் எடுத்து திரில்லிங்கான வெற்றியை பெற்றது.
IPL 2023: பிளே ஆப்புக்கு முன்னேற யாருக்கு அதிக வாய்ப்பு…, வெளியான புள்ளி விவரம் இதோ!!
இந்த போட்டியில், ஐபிஎல் நடத்தை விதியை மீறியதற்காக, கொல்கத்தா அணியின் கேப்டன் நிதிஷ் ராணாவுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. அதாவது, கொல்கத்தா அணி குறிப்பிட்ட நேரத்திற்குள் பந்து வீச தவறியதால், குறைந்தபட்ச ஓவர்-ரேட் குற்றத்திற்காக, அணியின் கேப்டன் நிதிஷ் ராணாவுக்கு ரூ. 12 லட்சம் அபராதம் விதித்துள்ளதாக ஐபிஎல் நிர்வாகம் அறிவித்துள்ளது.