டாஸ் போட்ட பிறகு கூட இதை செய்யலாமா?? ஐபிஎல் விதியில் ஏற்பட்ட புது மாற்றம்!!

0
டாஸ் போட்ட பிறகு கூட இதை செய்யலாமா?? ஐபிஎல் விதியில் ஏற்பட்ட புது மாற்றம்!!
டாஸ் போட்ட பிறகு கூட இதை செய்யலாமா?? ஐபிஎல் விதியில் ஏற்பட்ட புது மாற்றம்!!

ஐபிஎல் தொடருக்காக இம்பாக்ட் முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதை அடுத்து, தற்போது டாஸ் மற்றும் பிளேயிங் லெவனிலும் புது மாற்றம் அறிமுகப்படுத்தப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

ஐபிஎல் 2023:

இந்தியன் பிரீமியர் லீக் தொடரை எதிர் நோக்கி இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் உள்ளனர். 15 சீசன்களை கடந்துள்ள இந்த லீக் தொடரில் இதுவரை இல்லாத புதிய விதிகளையும் புகுத்தி உள்ளது. இதில், இம்பாக்ட் விதியானது அனைவருக்கும் தெரிந்த ஓன்று தான். தற்போது, டாஸ் மற்றும் பிளேயிங் லெவனில் புது மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

அதாவது, பொதுவாக, கிரிக்கெட் போட்டிகளில், டாஸ் போடுவதற்கு முன்னேர தங்களது அணிக்கான பிளேயிங் லெவனை தயார் செய்து வைத்து கொள்ளவர். இந்த லெவன், டாஸ் வென்ற அணிக்கு சாதகமாக இருந்தாலும், எதிரணிக்கு சற்று ஏமாற்றத்தை ஏற்படுத்தும். இதனால், இம்பாக்ட் விதி இருந்தும் பயனில்லாமல் போகும்.

ஓர் அணிக்கு எதிராக இவ்வளவு சராசரியா?? ஆஸ்திரேலியாவை அச்சுறுத்தும் ஹர்திக் பாண்டியா!!

இதன் விளைவால், “ஓர் அணி டாஸ் வென்ற பிறகு, அதற்கு ஏற்றாற் போல், பிளேயிங் லெவனை தேர்வு செய்து கொள்ளலாம்” என தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு உதாரணமாக, டாஸ் வென்ற அணி, முதலில் பவுலிங்கை தேர்வு செய்த்திருந்தால், அதற்கு தகுந்தாற் போல் பிளேயிங் லெவனை தயார்த்து கொள்ளலாம் என்பதே இந்த புது மாற்றம் என தகவல் வெளியாகி உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here