IPL 2023: கோடியில் புரளும் பரிசு தொகை…, சாம்பியன் பட்டத்தை வெல்லும் அணிக்கு எவ்வளவு தெரியுமா??

0
IPL 2023: கோடியில் புரளும் பரிசு தொகை..., சாம்பியன் பட்டத்தை வெல்லும் அணிக்கு எவ்வளவு தெரியுமா??
IPL 2023: கோடியில் புரளும் பரிசு தொகை..., சாம்பியன் பட்டத்தை வெல்லும் அணிக்கு எவ்வளவு தெரியுமா??

கடந்த மார்ச் மாத இறுதியில் இருந்து தொடங்கப்பட்ட இந்தியன் பிரீமியர் லீக் தொடரின் 16 வது சீசன் தற்போது இறுதி போட்டியை வந்தடைந்துள்ளது. அதாவது, 10 அணிகளுக்கு இடையே தொடங்கப்பட்ட இந்த ஐபிஎல் தொடரில், லீக் சுற்றுகளின் முடிவில் குஜராத் (GT), சென்னை (CSK), லக்னோ (LSG) மற்றும் மும்பை (MI) ஆகிய 4 அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறி இருந்தனர்.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

நேற்றுடன் (மே 26) இந்த பிளே ஆப் சுற்றுகள் அனைத்தும் முடிந்த நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) மற்றும் குஜராத் டைட்டன்ஸ் ஆகிய அணிகள் இறுதிப் போட்டிக்குள் நுழைந்துள்ளன. இந்த இறுதிப் போட்டியானது நரேந்திர மோடி மைதானத்தில் நாளை நடைபெற இருக்கிறது. இந்நிலையில், நடப்பு ஐபிஎல் சீசனுக்கான பரிசு தொகை குறித்த அப்டேட் வெளியாகி உள்ளது.

இதெல்லாம் உனக்கு தேவையாடி.., அசிங்கப்பட்டு நிற்கும் ஐஸ்வர்யா.., கண்ணை திட்டித்தீர்க்கும் ஜீவா!!!

அதாவது, நடப்பு ஐபிஎல்லின் மொத்த பரிசு தொகை 46.5 கோடியாக உள்ளது. இதில், சாம்பியன் பட்டத்தை வென்று முதலிடம் பிடிக்கும் அணிக்கு ரூ. 20 கோடியும், 2 வது இடத்தை பிடிக்கும் அணிக்கு ரூ. 13 கோடியும், 3வது இடத்தை பிடிக்கும் அணிக்கு 7 கோடியும், 4வது இடத்தை பிடிக்கும் அணிக்கு 6.5 கோடியும் பரிசு தொகையாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த பரிசு தொகையானது தோராயமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here